வெயிட்டிங் வீண் போகல.. பட்ஜெட் விலைக்கு 108MP கேமரா.. 5520mAh பேட்டரி.. மிரள விடும் புது Redmi 5ஜி போன்!
இந்திய மார்கெட்டில் வருகிற ஜனவரி மாதம் பல்வேறு பிராண்ட்களில் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதில் ரெட்மி பிரியர்களை வெயிட்டிங் மோடில் போட்டு வைத்த ரெட்மி நோட் 15 5ஜி (Redmi Note 15 5G) ஸ்மார்ட்போனும் இருக்கிறது. இப்போது, விலை விவரங்கள் வெளியாகி ரெட்மி பிரியர்களை தட்டித்தூக்கி இருக்கிறது. இந்த ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
வருகிற ஜனவரி 6 ஆம் தேதியில் இந்த ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது. கேமரா, பேட்டரி, சிப்செட் மற்றும் டிஸ்பிளே போன்ற முக்கிய பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டன. ஆனால், பட்ஜெட் விவரங்கள் உறுதியாகவில்லை. இருப்பினும், மார்கெட்டில் கசிந்துவிட்டது. ஆகவே, பட்ஜெட் விலையில் கிடைக்க இருப்பது தெரியவந்துள்ளது.

ரெட்மி நோட் 15 5ஜி அம்சங்கள் (Redmi Note 15 5G Specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 (Qualcomm Snapdragon 6 Gen 3) சிப்செட்டை இந்த ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. 108 எம்பி மெயின் கேமரா கொண்டுள்ளது. இதில் மல்டிபோகல் போர்ட்ராய்டு லெஜண்ட் (Mutifocul Portrait Legend) மற்றும் டைனாமிக் ஷாட் (Dynamic Shot) சப்போர்ட் கிடைக்கிறது.
மேலும், 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. 5520mAh பேட்டரி கொண்ட மாடலாக இந்த ரெட்மி நோட் 15 5ஜி போன் இருக்கிறது. 5 வருடங்களுக்கு பேட்டரி லைப் கிடைக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது. ஃபுல் சார்ஜ் செய்து, 1.6 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
ஐபி66 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுத்துள்ளது. 6.77 இன்ச் கர்வ்ட் அமோலெட் (Curved AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஹைட்ரோ டச் 2.0 (Hydro Touch 2.0) கிடைக்கிறது. இந்த பீச்சர்கள் ரெட்மி இந்தியா தளத்தில் உறுதி செய்யப்பட்டவையாக இருக்கிறது.
டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ், வெளியிட்ட தகவலின்படி ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.22,999 ஆக இருக்கும். மேலும், டாப்-எண்ட் மாடலான 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ. 24,999 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆகவே, 2 வேரியண்ட்களை எதிர்பார்க்கலாம்.
ரெட்மி நோட் 14 5ஜி அம்சங்கள் (Redmi Note 14 5G Specifications): இந்திய மார்கெட்டில் முன்னதாக வெளியான இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 அல்ட்ரா 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7025 Ultra 6nm) சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டுள்ளது. 6.67 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது.
இந்த டிஸ்பிளேவுக்கு 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் ரெசொலூஷன் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு கொண்டுள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது. மேலும், 2 எம்பி மேக்ரோ கேமரா கொடுத்துள்ளது. சோனி சென்சார், ஓஐஎஸ் டெக்னாலஜி உள்ளது.
20 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5110mAh பேட்டரி கிடைக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் உள்ளது. இந்த ரெட்மி நோட் 14 5ஜி போனின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.18,999ஆக இருக்கிறது. ஆகவே, நோட் 15 5ஜி போனை ரூ.22,999 விலைக்கு எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








