ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.2000 டிஸ்வுண்ட்டில் 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 5520mAh பேட்டரி.. எந்த மாடல்?
3டி கர்வ்ட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், 108 எம்பி கேமரா, 5520mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் பீச்சர்களுடன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ரெட்மி நோட் 15 5ஜி (REDMI Note 15 5G) ஸ்மார்ட்போன் இப்போது தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை பார்க்கலாம்.
இப்போது, அமேசான் தளத்தில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.26,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.24,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், ஈஎம்ஐ ஆப்ஷன், எக்ஸ்சேஞ்ச் போன்ஸ் போன்ற சலுகைகளும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

ரெட்மி நோட் 15 5ஜி அம்சங்கள் (REDMI Note 15 5G Specifications): 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. இந்த 3டி கர்வ்ட் டிஸ்பிளேவுக்கு (3D Curved Display) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.
ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 6 Gen 3 4nm) சிப்செட்டை இந்த ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு பேக் செய்யப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு சியோமி ஹைப்பர் ஓஎஸ் 2 (Xiaomi Hyper OS 2) கொடுக்கப்பட்டு உள்ளது.
4 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. 108 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 20 எம்பி செல்பீ கேமரா மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் உள்ளது. டைனாமிக் ஷாட்கள், மல்டிபோகல் கேமரா செட்டப் (Multifocal Camera Setup) பீச்சர்கள் கிடைக்கின்றன.
5520mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மாடலாக இந்த ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. 7.35 எம்எம் தடிமன் மற்றும் 178 கிராம் எடை கொடுத்துள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கிடைக்கிறது. இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளன.
மேலும், டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கிடைக்கிறது. டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கொடுக்க IP65 ரேட்டிங் + IP66 ரேட்டிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுபோக மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி (Military Grade Durability) கொடுக்க எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷனை இந்த ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது.
5ஜி (5G), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1) உள்ளிட்ட கனெக்டிவிட்டிகளை கொடுத்துள்ளது. கிளாசியர் ப்ளூ (Glacier Blue), பிளாக் (Black) மற்றும் மிஸ்ட் பர்பிள் (Mist Purple) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். 108 எம்பி கேமரா மற்றும் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளேவுக்கு பக்காவான ஆப்ஷனாக இது இருக்கிறது.


Click it and Unblock the Notifications