அடிச்சு நொறுக்கும் புது Redmi போன்.. பக்கா பட்ஜெட்டில் 5ஜி, IP66, 7.35 மிமீ ஸ்லிம் பாடி, 108MP OIS கேமரா!
ரெட்மி (Redmi) நிறுவனம் ஆனது இந்திய சந்தைக்கான அதன் 2026 ஆம் ஆண்டை 3 புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்துடன் தொடங்குகிறது. இந்நிறுவனம் வருகிற ஜனவரி 6 ஆம் தேதி அன்று ரெட்மி நோட் 15 5ஜி சீரீஸ் (Redmi Note 15 5G Series) ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த சீரீஸின் கீழ் ரெட்மி நோட் 15 5ஜி (Redmi Note 15 5G), ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி (Redmi Note 15 Pro 5G) மற்றும் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 15 Pro Plus 5G) ஆகிய 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இதற்கிடையில் ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போனின் டீஸர்கள் அதன் ஸ்லிம் பாடி மற்றும் ஐபி ரேட்டிங் போன்ற சில முக்கிய விவரங்களை உறுதிப்படுத்தியுள்ளன. இது 5520mAh பேட்டரி பேக்கை கொண்டிருந்தாலும் கூட ஸ்லிம் ஆன 7.35மிமீ பாடி உடன் வரும் என்பதை ரெட்மி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் "தனிமங்களுக்கு" எதிரான பாதுகாப்பிற்காக, ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தூசிப்புகாத வடிவமைப்பு மற்றும் IP66 நீர் எதிர்ப்பு மதிப்பீட்டை கொண்டிருக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது சற்றே உயரமான 6.77-இன்ச் கர்வ்டு AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது
ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், TÜV Tட்ரிபிள் ஐ கேர் சான்றிதழ் மற்றும் ஹைட்ரோ டச் 2.0 (Hydro Touch 2.0) ஆகிய அம்சங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட்
- 8GB ரேம் மற்றும் 256GB வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்
- OIS, மல்டி-ஃபோகல் போர்ட்ரெய்ட், 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் டைனமிக் ஷாட் ஆகியவற்றை ஆதரிக்கும் 108MP ப்ரைமரி கேமரா
- ஆரம்ப விலை ரூ.22,999 ஆக இருக்கலாம்
முன்னதாக அறிமுகமான ரெட்மி நோட் 14 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது டியுவி ரெயிண்லேண்ட் (TUv Rheinland) சான்றிதழ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.67-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 7025 அல்ட்ரா சிப்செட் (MediaTek Dimensity 7025 Ultra) மூலம் இயக்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி ப்ரைமரி கேமரா + 2எம்பி இரண்டாம் நிலை லென்ஸ்-ஐ கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது. கூடவே பிங்கர் பிரிண்ட் சென்சார், ஐபி64 ரேட்டிங் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷனையும் கொண்டுள்ளது. கடைசியாக இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5110mAh பேட்டரியை கொண்டுள்ளது.
முன்னதாக அறிமுகமான ரெட்மி நோட் 14 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது கார்னிங் கொரில்லா விக்டஸ் 2, டியுவி ரெயிண்லேண்ட் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் ஓஎல்இடி கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 70300 அல்ட்ரா சிப்செட் (Mediatek Dimensity 7300 Ultra) மூலம் இயக்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி ப்ரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 8எம்பி மூன்றாம் நிலை லென்ஸ்-ஐ கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 20எம்பி செல்பீ கேமரா உள்ளது. வேகன் லெதர் பினிஷ் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் ஐபி66, ஐபி67, ஐபி69 ரேட்டிங்களுக்கானஆதரவும் உள்ளது.கடைசியாக இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5500mAh பேட்டரியை கொண்டுள்ளது.
முன்னதாக அறிமுகமான ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது கார்னிங் கொரில்லா விக்டஸ் 2 மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் ஓஎல்இடி கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 7s Gen 3 Chipset) மூலம் இயக்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி ஷாவ்மீ கஸ்டம் சூப்பர் சென்சார் பிளாக்ஷிப் லைட் ஹண்டர் 800 (Xiaomi Custom Super Sensor Flagship Light Hunter 800) கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 50எம்பி போர்ட்ரெய்ட் டெலிஃபோட்டோ கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 20எம்பி செல்பீ கேமரா உள்ளது. இது 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6200mAh பேட்டரியை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








