Home
Mobile

ஜன.6 வரை எந்த போனும் வாங்காதீங்க.. 108MP கேமரா.. இந்தியாவுக்கு வரும் புது Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி நோட் 15 5ஜி (Redmi Note 15) ஸ்மார்ட்போனை வரும் 2026 ஜனவரி 6-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும். மேலும் இந்த போனின் விவரக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ரெட்மி நோட் 15 அம்சங்கள் (Redmi Note 15 Specifications): ரெட்மி நோட் 15 போனின் பின்புறம் 108எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் ஆகிய கேமராக்கள் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா உடன் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ஜன.6 வரை எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது புது Redmi 5ஜி போன்..

அதேபோல் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (Full HD+ AMOLED display) டிஸ்பிளே உடன் இந்த புதிய ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் (Qualcomm's Snapdragon 6 Gen 3 chipset) உடன் புதிய ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

குறிப்பாக 5520mAh பேட்டரி உடன் ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமி ஆதரவுடன் இந்த ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் இருக்கும். 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

அதுவும் HyperOS 2 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் புதிய ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor)வசதியுடன் ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 15 5G India launch date leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X