Home
Mobile

பொங்கல் ஜாக்பாட்.. ரூ.3000 சலுகையுடன் இன்று முதல் முறையாக விற்பனைக்கு வரும் Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி நோட் 15 5ஜி (Redmi Note 15 5G) ஸ்மார்ட்போனை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது. அமேசான், எம்ஐ.காம் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களில் இந்த போனை இன்று வாங்க முடியும். இப்போது ரெட்மி நோட் 15 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ரெட்மி நோட் 15 5ஜி அம்சங்கள் (Redmi Note 15 5G specifications): 6.77 இன்ச் ஃபுல் எச்டிபிளஸ் 3டி கர்வ்ட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2392 x 1080 பிக்சல்கள் 120 Hz ரெஃப்ரெஷ் ரேட், 240 Hz டச் சாம்பிளிங் ரேட், 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, டிசிஐ பி3 (DCI P3) வைடு கலர் காமட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

பொங்கல் ஜாக்பாட்.. இன்று விற்பனைக்கு வரும் Redmi 5ஜி போன்.. எந்த மாடல்

ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 6 Gen 3 4nm) சிப்செட் உடன் இந்த புதிய ரெட்மி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது.

ஹைப்பர் ஓஎஸ் 2 (Hyper OS 2) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். 8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

108 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.

இதுதவிர மல்டிபோகல் கேமரா செட்டப், கிளாசிக் போர்ட்ராய்டு, போகஸ் போர்ட்ராய்டு, ஆர்டிஸ்டிக் போர்ட்ராய்டு, பர்சனல் ஏஐ இமேஜிங் அசிஸ்டன்ட், ஏஐ குரூப் செல்பீ கேம் போன்ற பல கேமரா அம்சங்கள் உள்ளன. மேலும் IP65 ரேட்டிங் மற்றும் IP66 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் உடன் இந்த புதிய போன் வெளிவந்தது.

அதேபோல் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழ் பெற்றுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி போன். இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட வசதிகளும் இந்த போனில் உள்ளன.

பொங்கல் ஜாக்பாட்.. இன்று விற்பனைக்கு வரும் Redmi 5ஜி போன்.. எந்த மாடல்

5520mAh பேட்டரி மறறும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது. 5ஜி, டூயல் 5ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, புளூடூத் 5.1இ ஜிபிஎஸ், குளோனஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் உள்ளன. க்ளேசியர் ப்ளூ, பிளாக் மற்றும் மிஸ்ட் பர்பிள் நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 15 5ஜி போனின் விலை ரூ.22,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.24,999-ஆக உள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.3000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை ரூ.19999 விலையில் வாங்கிவிட முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 15 5G goes on sale today for the first time in India: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X