ராஜாதி ராஜா Redmi.. ஸ்லிம் டிசைனில் 108MP மாஸ்டர் பிக்சல் கேமரா, 5500mAh பேட்டரி.. புது 5G போன்!
ரெட்மி (Redmi) நிறுவனம் ஆனது "அலைகடலென" பல புதிய ஸ்மார்ட்போன்களை வரிசையாக அறிமுகம் செய்ய உள்ளது. கடந்த சில நாட்களாக ரெட்மி நோட் 15 சீரிஸின் (Redmi Note 15 Series) கீழ் வரும் ஸ்மார்ட்போன்களை பற்றிய பல லீக்ஸ் தொடர்ச்சியாக வெளியாகின. தற்போது வெளியீட்டு தேதி உடன் சேர்ந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது!
ரெட்மி நிறுவனம் 2026 ஆம் ஆண்டு தொடங்கியதுமே.. ரெட்மி நோட் 15 5ஜி 108 மாஸ்டர் பிக்சல் எடிஷன் (Redmi Note 15 5G 108 Master Pixel Special Edition) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இது ஜனவரி 6, 2026 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனுக்கான பிரத்யேக மைக்ரோசைட் இப்போது அமேசான் இந்தியா (Amazon India) வலைதளத்தில் நேரலையில் உள்ளது. ஆக இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் அமேசான் வழியாக வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இப்போதைக்கு இந்த ஸ்மார்ட்போனின் டிசைன் மட்டுமே டீஸ் செய்யப்பட்டுள்ளது.
டீசர் வழியாக - இது கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டிருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது. மேலும் ஸ்மார்ட்போனின் இடது பக்கம் க்ளீன் ஆன உள்ளது; ஆக பவர் பட்டன் மற்றும் வால்யூம் கண்ட்ரோல்கள் வலது பக்கத்தில் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஒரு மெட்டல் ஃபிரேம் இடம்பெறலாம் என்பது போல் தெரிகிறது. இது ஒரு ஸ்லிம் ஆன டிசைனை கொண்டிருக்கும் என்பதையும் டீஸர் வெளிப்படுத்துகிறது
என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? சமீபத்தில், எக்ஸ் தளம் வழியாக, டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் (@heyitsyogesh) ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போனின் இந்தியன் வேரியண்ட்டின் முக்கிய அம்சங்களை லீக் செய்து இருந்தார். அதன்படி இந்த ஸ்மார்ட்போனில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.8-இன்ச் AMOLED டிஸ்பிளே இடம்பெறலாம்
மேலும் இது ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) இல் இயங்கும் என்றும், பெயர் குறிப்பிடப்படாத ஸ்னாப்டிராகன் சிப்செட் மூலம் இயக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கேமராக்களை பொறுத்தவரை ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா செட்டப்பில் 108-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா பேக் செய்யப்படலாம். இது 5500mAh க்கும் அதிகமான பேட்டரியை கொண்டிருக்கலாம். கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் ஆன்லைனில் (அமேசான் இந்தியா வழியாக) வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
முதலில் ரெட்மி நோட் 15 சீரிஸின் கீழ் 3 மாடல்கள் வருமென்றும், அனைத்துமே 5ஜி போன்களாக இருக்குமென்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதாவது ரெட்மி நோட் 15 சீரீஸின் கீழ் ரெட்மி நோட் 15 (Redmi Note 15), ரெட்மி நோட் 15 ப்ரோ (Redmi Note 15 Pro) மற்றும் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் (Redmi Note 15 Pro Plus) ஆகிய மூன்று 5ஜி மாடல்கள் வருமென்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இப்போது இதில் ஒரு 4ஜி மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தகவல் கிடைத்துள்ளது. அது ரெட்மி நோட் ப்ரோ 4ஜி (Redmi Note 15 Pro 4G) மாடல் ஆகும், அதாவது 5ஜி ஆதரவுடன் வரும் ப்ரோ மாடலில் உள்ள அம்சங்கள் 4ஜி மாடலில், சற்றே மலிவான விலைக்கு கிடைக்கலாம்.
ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 6.83-இன்ச் 1.5K pOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா சிப்செட்
- 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ்
- 200-மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார்
- 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ்
- 2-மெகாபிக்சல் மேக்ரோ கேமரா
- 20-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 45W சார்ஜிங் ஆதரவு
- 6580mAh பேட்டரி


Click it and Unblock the Notifications








