சத்தமின்றி அறிமுகமானது புதிய Redmi போன்.. 200எம்பி கேமரா.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி நோட் 14எஸ் (Redmi Note 14S) ஸ்மார்ட்போனை சத்தமின்றி அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த புதிய ரெட்மி போன் தற்போது ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ரெட்மி நோட் 14எஸ் அம்சங்கள் (Redmi Note 14S specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது ரெட்மி நோட் 14எஸ். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் புரொடெக்சன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் தரமான மீடியாடெக் ஹீலியோ ஜி99 அல்ட்ரா சிப்செட் உடன் ரெட்மி நோட் 14எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதேபோல் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் இந்த மீடியாடெக் சிப்செட்.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் ரெட்மி நோட் 14எஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதல் மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ரெட்மி போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
200எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 14எஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
குறிப்பாக IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் ரெட்மி நோட் 14எஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் HyperOS மூலம் இந்த போன் இயங்குகிறது. அதுவும் இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.
5000mAh பேட்டரி உடன் ரெட்மி நோட் 14எஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
4ஜி, வைஃபை, ஜபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் ரெட்மி நோட் 14எஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மர்ரட்போனின் விலை $260 (இந்திய மதிப்பில் ரூ.22,606)-ஆக உள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications








