Home
Mobile

விட்ராதீங்க சார்.. 17170 போதும்.. 108MP கேமரா.. 5500mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. 33W சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்தியாவின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரியர்களை வெயிட்டிங் மோடில் போடும்படியான விலையில் 108 எம்பி மெயின் கேமரா, ஃபுல்எச்டிபிளஸ் அமோலெட் டிஸ்பிளே, 5500mAh பேட்டரி, 33W டர்போ சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் ரெட்மி நோட் 14 (REDMI Note 14) போனானது, குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. ரெட்மி நோட் 14 5ஜி வேரியண்ட் இந்தியாவில் மிகப்பெரும் வரவேற்பு பெற்றுள்ளதால், இந்த மாடலுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது.

ரெட்மி நோட் 14 5ஜி சீரிஸ் இந்திய மார்கெட்டில் வெளியாகி விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது. பட்ஜெட்டில் வெளியாகியதால், வரவேற்பு அதிகமாக இருக்கிறது. இப்போது, 4ஜி சீரிஸ் குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. வெறும் ரூ.17,170 பட்ஜெட்டில் ஆரம்ப விலை இருப்பதால், இந்தியாவில் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

விட்ராதீங்க.. 17170 போதும்.. 108MP கேமரா.. 5500mAh பேட்டரி.. மாடல்?

அடுத்த சில வாரங்களில் இங்கு எதிர்பார்க்கலாம் என்பதால், ரெட்மி பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரியர்களும் இதற்காக காத்திருக்கின்றனர். ஏனென்றால், ஏஐ பீச்சர்களை கொண்ட 108 எம்பி மெயின் கேமராவானது, ஏஐ பீச்சர்களுடன் பேக் செய்யப்பட்டுள்ளது. பேட்டரி, டிஸ்பிளேவும் மிட்-ரேஞ்ச் குவாலிட்டியில் கிடைக்கிறது.

ரெட்மி நோட் 14 அம்சங்கள் (REDMI Note 14 Specifications): இந்த ரெட்மி போனில் சியோமி ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi Hyper OS) மற்றும் ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் ஹீலியோ ஜி99 அல்ட்ரா (Octa Core 6nm MediaTek Helio G99 Ultra) சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் சியோமி இமேஜிங் என்ஜின் (Xiaomi Imaging Engine) பேக் செய்யப்பட்டுள்ளது.

டிஸ்பிளேவில் மிட்-ரேஞ்ச் லெவலுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் வருகிறது. வெட் ஃபிங்கர்ஸ் (Wet Fingers) டச் சப்போர்ட் கொண்ட 6.67 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 960Hz PWM டிம்மிங் மற்றும் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. இந்த ரெட்மி நோட் 14 போனில் 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. இந்த கேமராவில் 3X லாஸ்லெஸ் ஜூமிங் மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. மேலும், ஏஐ பீச்சர்களை கொடுக்கிறது.

ஆகவே, ஏஐ எரைஸ் (AI Erase), ஏஐ ஸ்கை (AI Sky) போன்ற பீச்சர்கள் வருகின்றன. ஸ்பீடு மற்றும் கிளியர் ஷாட்களுக்காக சியோமி இமேஜிங் என்ஜின் சப்போர்ட் கிடைக்கிறது. 20 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் வருகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், IP54 ரெசிஸ்டன்ட் உள்ளது.

இந்த ரெட்மி நோட் 14 போனில் 5500mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. ஆரம்ப விலை ரூ.17,170 பட்ஜெட்டில் இருக்கிறது. இந்தியாவிலும் இதே விலையில் எதிர்பார்க்கலாம். நான்கு கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
REDMI Note 14 With 108MP Camera Launched Global Market Expected India Soon Here Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X