Home
Mobile

அதிருது இந்திய மார்க்கெட்.. சோனி கேமரா.. 90W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. Redmi 5ஜி போன்கள் ரெடி..

ரெட்மி நிறுவனம் அடுத்து ரெட்மி நோட் 14 சீரிஸ் (Redmi Note 14 Series) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது தற்போது இந்த போன்களின் டீசர் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே கூடிய விரைவில் இந்த போன்கள் இந்தியாவில் அறிமுகமாகும். குறிப்பாக ரெட்மி நோட் 14, ரெட்மி நோட் 14 ப்ரோ, ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்களில் வெளிவரும்.

அதேபோல் இந்த ரெட்மி நோட் 14 சீரிஸ் போன்கள் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன்கள் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன. மேலும் இந்த போன்களின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அதிருது இந்திய மார்க்கெட்..  Redmi 5ஜி போன்கள் ரெடி..

ரெட்மி நோட் 14 அம்சங்கள் (Redmi Note 14 Specifications): 6.67 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (Super AMOLED Display) கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 14 போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி பேக், 2100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன. 5110mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி அல்ட்ரா 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7025 Ultra 6nm) சிப்செட் கொண்டுள்ளது இந்த போன்.

அதேபோல் 50எம்பி டூயல் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த ரெட்மி நோட் 14 போனில் உள்ளன.

ரெட்மி நோட் 14 ப்ரோ அம்சங்கள் (Redmi Note 14 Pro Specifications): 6.6-இன்ச் 1.5K ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்டுள்ளது ரெட்மி நோட் 14 ப்ரோ போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,3000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 2560 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், எச்டிஆர் 10 பிளஸ், டால்பி விஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. குறிப்பாக 5500mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இந்த போனில் உள்ளன.

50எம்பி சோனி எல்ஒய்டி-600 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 14 ப்ரோ போன். மேலும் 20எம்பி செல்பி கேமரா, ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 Ultra 4nm) சிப்செட், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், டால்பி அட்மாஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் ரெட்மி நோட் 14 ப்ரோ போனில் உள்ளன.

ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Redmi Note 14 Pro Plus Specifications):6.6-இன்ச் 1.5K ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்டுள்ளது ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 2560 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், எச்டிஆர் 10 பிளஸ், டால்பி விஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன குறிப்பாக 6200mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது இந்த போன்.

அதிருது இந்திய மார்க்கெட்..  Redmi 5ஜி போன்கள் ரெடி..

50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி போர்ட்ரெயிட் டெலிபோட்டோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் போன். 20எம்பி செல்பி கேமரா, ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 3 4nm) சிப்செட், அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், டால்பி அட்மாஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட வசதிகள் இந்த போனில் உள்ளன.

குறிப்பாக ரெட்மி நோட் 14, ரெட்மி நோட் 14 ப்ரோ, ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் போன்கள் இந்தியாவில் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ரெட்மி போன்கள்.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X