வந்துட்டான் யா.. Drop Resistant பாடி, 90W ரேப்பிட் சார்ஜிங்.. வச்சி செய்யும் விலையில் Redmi Note 14 சீரீஸ்!
Redmi Note 14 Series: பிரீமியம் அல்லது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் மீது ஆர்வம் கொண்ட அனைவரின் கவனமும் ஆப்பிளின் ஐபோன் 16 சீரிஸ் மாடல்களின் மீது இருக்கும் நேரத்தில்.. பட்ஜெட் வாசிகளின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்க்கும் படியான ஒரு வேலையை பார்த்துள்ளது - சீன ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன ரெட்மி நிறுவனம். இந்நிறுவனத்தின் கீழ் பல வகையான ஸ்மார்ட்போன்கள் இருந்தாலும் கூட "ஆல் ஏரியாவுலயும் அய்யா கில்லி டா" என்று கூறுவது ரெட்மியின் நோட் சீரிஸ் (Redmi Note Series) ஸ்மார்ட்போன்கள் தான்!
கடந்த ஆண்டு அறிமுகமாகி சூப்பர் ஹிட் அடித்த ரெட்மி 13 நோட் சீரிஸின் அப்கிரேடெட் வெர்ஷன் ஆன ரெட்மி 14 சீரீஸ் குறித்து பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளது. ரெட்மி 14 சீரீஸ் எப்போது அறிமுகமாகும்? இதன்கீழ் என்னென்ன மாடல்கள் வெளியாகும்? அவைகள் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

ரெட்மி 14 சீரீஸ் எப்போது அறிமுகமாகும் (Redmi Note 14 series Launch Date)? ரெட்மி 14 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது இம்மாத இறுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சரியான வெளியீட்டு தேதி குறித்த விவரங்கள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. விரைவில் சரியான தேதி அறிவிக்கப்படலாம்.
ரெட்மி 14 சீரீஸின் கீழ் என்னென்ன மாடல்கள் அறிமுகமாகும்? வழக்கம் போல் இந்த சீரிஸின் கீழும் மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது: ரெட்மி நோட் 14 (Redmi Note 14), ரெட்மி நோட் 14 ப்ரோ (Redmi Note 14 Pro) மற்றும் ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் (Redmi Note 14 Pro Plus).
ரெட்மி 14 சீரீஸில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்? ரெட்மி பிராண்டின் பொது மேலாளர் ஆன தாமஸ் வாங் (Redmi Brand General Manager Thomas Wang) வரவிருக்கும் ரெட்மி நோட் 14 சீரிஸ் மாடல்கள் ஆனது முந்தைய மாடல்களை விட கணிசமான மேம்பாடுகளை கொண்டுவரும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.
அவருடைய கூற்றுப்படி, ரெட்மி நோட் 14 சீரிஸ் ஆனது ஐபி68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு மதிப்பீட்டை (IP68 water and dust resistance rating) கொண்டிருக்கும். ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு ரெட்மி நோட் 13 சீரிஸின் அறிமுகமான ப்ரோ பிளஸ் மாடலில் மட்டுமே ஐபி68 ரேட்டிங் இருந்தது. ரெட்மி 13 மற்றும் ரெட்மி 13 ப்ரோ மாடல்களில் ஐபி54 ரேட்டிங்கை மட்டுமே கொண்டிருந்தன. ஆனால் ரெட்மி நோட் 14 சீரீஸின் கீழ் வரும் அனைத்து மாடல்களுமே ஐபி68 ரேட்டிங்கை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தாமஸ் வாங், புதிய நோட் 14 சீரிஸ் போன்கள் ஆனது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 16 சீரிஸை போலவே "மிகவும் வலுவான டிராப் ரெசிஸ்டன்ஸ் மற்றும் பேட்டரி லைஃப்பை" கொண்டிருக்கும் என்று கூறி உள்ளார். நினைவூட்டும் வண்ணம் ரெட்மி நோட் 13 ப்ரோ ஆனது 67W சார்ஜிங் ஆதரவுடன் 5100mAh பேட்டரியை கொண்டுள்ளது.
அதேசமயம் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் மாடல் ஆனது 120W சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் ரெட்மி 14 சீரிஸின் ப்ரோ மாடல்களில் பெரிய பேட்டரிகளை எதிர்பார்க்கலாம். சிப்செட்டை பொறுத்தவரை ரெட்மி நோட் 14 ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் இடம்பெறலாம். டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1.5கே ரெசல்யூஷன் உடனான டிஸ்பிளேவை பேக் செய்யலாம். கேமராவை பொறுத்தவரை 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் உடனான ட்ரிபிள் ரியர் கேமராக்களை கொண்டிருக்கலாம்.
ரெட்மி 14 சீரீஸ் என்ன விலைக்கு வரும்? எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை ரெட்மி நோட் 14 ஆனது 17,990 க்கும், ரெட்மி நோட் 14 ப்ரோ ஆனது ரூ.23,990 க்கும் மற்றும் ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் மாடல் ஆனது ரூ.36,990 க்கும் அறிமுகம் செய்யப்படலாம். இவைகள் முதலில் சீனாவில் அறிமுகமாகும். அதன் பின்னரே இந்தியாவிற்கு வரும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications