Home
Mobile

ஒரே போடு.. Redmi Note 15 Pro சீரீஸ் விற்பனைக்கு வந்ததும் Redmi Note 14 சீரீஸ் போன்களின் விலை சரிந்தது!

இந்தியாவில் ரெட்மி (Redmi) நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன்களாக ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி மற்றும் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி மாடல்களின் இந்திய விற்பனை இன்று (பிப்.4) முதல் தொடங்கியது இதற்கிடையில் ரெட்மி நோட் 14 5ஜி சீரீஸின் கீழ் உள்ள 3 ஸ்மார்ட்போன்களின் விலைகளுமே குறைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் புதிதாக அறிமுகமான ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.37,999 முதல் தொடங்குகிறது. இது பேஸிக் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ஆகும். மறுகையில் உள்ள ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.29,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒரே போடு.. Redmi Note 14 சீரீஸ் போன்களின் விலை சரிந்தது!

ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி மாடல் ஆனது காஃபி மோச்சா, மிராஜ் ப்ளூ மற்றும் கார்பன் பிளாக் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது. ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி மாடல் ஆனதுசில்வர் ஆஷ், மிராஜ் ப்ளூ மற்றும் கார்பன் பிளாக் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது

பழைய ரெட்மி 14 5ஜி சீரீஸ் மாடல்களின் குறைக்கப்பட்ட விலை விவரங்கள்: ரெட்மி நோட் 14 5ஜி (Redmi Note 14 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.17,999 இல் இருந்து ரூ.16,499 ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி (Redmi Note 14 Pro 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.23,999 இல் இருந்து ரூ.21,999 ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது.

கடைசியாக உள்ள ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 14 5G Pro Plus)ஸ்மார்ட்போன் ஆனது அதன் அசல் அறிமுக விளையான ரூ.29,999 க்கு பதிலாக ரூ.3000 விலை குறைப்பை பெற்று ரூ.26,999 க்கு வாங்க கிடைக்கிறது. மேற்கா குறைக்கப்பட்ட விலைகள் அனைத்துமே ஷாவ்மீ இந்தியா (Xiaomi India) வலைத்தளத்தில் பிரதிபலிக்கின்றன.

ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது கார்னிங் கொரில்லா விக்டஸ் 2 மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் ஓஎல்இடி கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 7s Gen 3 Chipset) மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி ஷாவ்மீ கஸ்டம் சூப்பர் சென்சார் பிளாக்ஷிப் லைட் ஹண்டர் 800 (Xiaomi Custom Super Sensor Flagship Light Hunter 800) கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 50எம்பி போர்ட்ரெய்ட் டெலிஃபோட்டோ கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 20எம்பி செல்பீ கேமரா உள்ளது. இது 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6200mAh பேட்டரியை கொண்டுள்ளது.

ரெட்மி நோட் 14 5ஜி ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது கார்னிங் கொரில்லா விக்டஸ் 2, டியுவி ரெயிண்லேண்ட் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் ஓஎல்இடி கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 70300 அல்ட்ரா சிப்செட் (Mediatek Dimensity 7300 Ultra) மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி ப்ரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 8எம்பி மூன்றாம் நிலை லென்ஸ்-ஐ கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 20எம்பி செல்பீ கேமரா உள்ளது. வேகன் லெதர் பினிஷ் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் ஐபி66, ஐபி67, ஐபி69 ரேட்டிங்களுக்கானஆதரவும் உள்ளது.கடைசியாக இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5500mAh பேட்டரியை கொண்டுள்ளது.

ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது டியுவி ரெயிண்லேண்ட் (TUv Rheinland) சான்றிதழ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.67-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 7025 அல்ட்ரா சிப்செட் (MediaTek Dimensity 7025 Ultra) மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி ப்ரைமரி கேமரா + 2எம்பி இரண்டாம் நிலை லென்ஸ்-ஐ கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது. கூடவே பிங்கர் பிரிண்ட் சென்சார், ஐபி64 ரேட்டிங் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷனையும் கொண்டுள்ளது. கடைசியாக இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5110mAh பேட்டரியை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 14 Series gets Price Cut After Redmi Note 15 Pro Series India Sale has Started
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X