ஆர்டர் பிச்சிக்க போகுது.. ரூ.13,999 பட்ஜெட்ல 5110mAh பேட்டரி.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் இருக்கும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களை தட்டித்தூக்கும்படியான விலைக்கு ரெட்மி நோட் 14 எஸ்இ 5ஜி (Redmi Note 14 SE 5G) போன் வெளியாகி இருக்கிறது. சோனி சென்சார் கேமரா, 5110mAh பேட்டரி, அமோலெட் டிஸ்பிளே, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களிலும் மிரளவிடுகிறது. இந்த ரெட்மி நோட் 14 எஸ்இ 5ஜி போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரெட்மி நோட் 14 எஸ்இ 5ஜி அம்சங்கள் (Redmi Note 14 SE 5G Specifications): இந்த போனில் 6.67 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2160Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 2100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ஐஎம்ஜி பிஎக்ஸ்எம் (IMG BXM) ஜிபியு கிடைக்கிறது.

இந்த பட்ஜெட் செக்மெண்ட்டில் டப்பஸ்ட் மாடாலாக சொல்லும்படி கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு கொடுக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 அல்ட்ரா (Octa Core Dimensity 7025 Ultra) சிப்செட் கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.
இந்த ரெட்மி போனில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5110mAh பேட்டரி கிடைக்கிறது. டைப்-சி சார்ஜிங் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொடுக்கிறது. மேலும், டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் உள்ளது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் எதிர்பார்க்கலாம். 7.99 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது.
இந்த பட்ஜெட்டிலும் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொடுத்துள்ளது. மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் மட்டுமல்லாமல், ஓஐஎஸ் (OIS) மற்றும் ஈஐஎஸ் (EIS) டெக்னாலஜி கிடைக்கிறது. ஏகப்பட்ட ஸ்மார்ட் பீச்சர்களையும் கேமராவில் பார்க்க முடிகிறது.
ஆகவே, மோஷன் டிராக்கிங் போகஸ் (Motion Tracking Focus), நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ப்ரோ மோட் (Pro Mode) டெலிப்ராம்டர் (Teleprompter) போன்ற பல்வேறு பீச்சர்களை கொடுக்கிறது. இந்த ரெட்மி நோட் 14 எஸ்இ 5ஜி போனில் 20 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இப்போது விலை மற்றும் விற்பனை. விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ரெட்மி நோட் 14 எஸ்இ 5ஜி விலை (Redmi Note 14 SE 5G Price): இந்த ரெட்மி போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.14,999 ஆக இருக்கிறது. ரூ.1,000 உடனடி கேஷ்பேக் போக ரூ.13,999 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது. ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் விற்பனை தொடங்க இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் எம்ஐ தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








