யாரும் எதிர்பார்க்காத பொங்கல் சர்ப்ரைஸ்.. சோனி கேமரா.. ஆஃபரில் Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி நோட் 14 எஸ்இ 5ஜி (Redmi Note 14 SE 5G) ஸ்மார்ட்போன் ஆனது தற்போது சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 50எம்பி கேமரா, டைமன்சிட்டி சிப்செட், பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் தற்போது ரெட்மி நோட் 14 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ரெட்மி நோட் 14 எஸ்இ 5ஜி அம்சங்கள் (Redmi Note 14 SE 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 அல்ட்ரா (Octa Core Dimensity 7025 Ultra) சிப்செட் உடன் வெளிவந்துள்ளது இந்த ரெட்மி போன். மேலும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
இந்த போன் 6.67 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2400 x 1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5), 2160Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட், 2100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட் பல அம்சங்கள் உள்ளன.
அதேபோல் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன். மேலும் IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் இந்த ரெட்மி நோட் 14 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக 50 எம்பி சோனி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ரெட்மி நோட் 14 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவும் மோஷன் டிராக்கிங் போகஸ் (Motion Tracking Focus), நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ப்ரோ மோட் (Pro Mode) டெலிப்ராம்டர் (Teleprompter) உள்ளிட்ட பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியும் இதில் உள்ளது.
ரெட்மி நோட் 14 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போன் 5110mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








