Home
Mobile

ஜூலை 28-இல் இந்தியாவுக்கு வரும் புதிய ரெட்மி 5ஜி போன்.. சோனி கேமரா.. 5110mAh பேட்டரி.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி நோட் 14 எஸ்இ 5ஜி (Redmi Note 14 SE 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் வரும் ஜூலை 28-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் ஜூலை 28-ம் தேதி மதியம் 12 மணி அளவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த புதிய ரெட்மி நோட் 14 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜூலை 28-இல் இந்தியாவுக்கு வரும் புதிய ரெட்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

ரெட்மி நோட் 14 எஸ்இ 5ஜி அம்சங்கள் (Redmi Note 14 SE 5G specifications): 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே வசதியுடன் இந்த ரெட்மி நோட் 14 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5 protection) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor)வசதி ரெட்மி நோட் 14 எஸ்இ 5ஜி போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 300% வால்யூம் பூஸ்ட் (300% volume boost) மற்றும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (stereo speakers) இந்த போனில் உள்ளன. எனவே இந்த போனில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி சோனி எல்ஒய்டி-600 மெயின் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும்.

5110mAh பேட்டரி வசதியுடன் இந்த ரெட்மி நோட் 14 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7025 (MediaTek Dimensity 7025) உடன் இந்த புதிய ரெட்மி நோட் 14 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம்.

ஜூலை 28-இல் இந்தியாவுக்கு வரும் புதிய ரெட்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி வசதியும் இந்த போனில் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரெட்மி போனில் இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரெட்மி நோட் 14 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.25,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ரெட்மி போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 14 SE 5G India launch date announced: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X