Home
Mobile

மார்க்கெட்டே மிரள போகுது.. 50எம்பி கேமரா.. தரமான டிஸ்பிளே.. வருகிறது புதிய ரெட்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் ரெட்மி நோட் 14 ப்ரோ எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அதுவும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த புதிய ரெட்மி போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த ரெட்மி நோட் 14 ப்ரோ போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

ரெட்மி நோட் 14 ப்ரோ அம்சங்கள் (Redmi Note 14 Pro specifications): 1.5K மைக்ரோ-கர்வ்ட் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி போன். மேலும் பஞ்ச்-ஹோல் செல்பி கேமராவைக் கொண்டு வெளிவரும் இந்த ரெட்மி நோட் 14 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த புதிய ரெட்மி போன் இந்தியாவில் அறிமுகமாகும்.

மார்க்கெட்டே மிரள போகுது.. வருகிறது புதிய ரெட்மி 5ஜி போன்.. எந்த மாடல்

50எம்பி பிரைமரி கேமரா + டெலிபோட்டோ லென்ஸ் + டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

5000எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், 5ஜி ஆதரவு, யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ரெட்மி நோட் 14 ப்ரோ போன்அறிமுகாகும். குறிப்பாக அனைத்து சிறப்பான வசதிகளுடன் ரெட்மி நோட் 14 ப்ரோ போன் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதேபோல் வரும் ஜூலை 9 ஆம் தேதி இந்தியாவில் ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த போனின் அம்சங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ரெட்மி 13 5ஜி அம்சங்கள் (Redmi 13 5G specifications): 6.79-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது ரெட்மி 13 5ஜி. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 900 நிட்ஸ் ப்ரைடன்ஸ் வசதி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு 3 வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Snapdragon 4 Gen 2 Chipset) வசதியுடன் ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும்.

மார்க்கெட்டே மிரள போகுது.. வருகிறது புதிய ரெட்மி 5ஜி போன்.. எந்த மாடல்

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) ஆதரவுடன் ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.

50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இதில் உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5300எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (33W fast charging) வசதியும் உள்ளது. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.12,000 பட்ஜெட்டில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Redmi Note 14 Pro will be launched soon: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X