Home
Mobile

ரெடியா இருங்க.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. AMOLED டிஸ்பிளே.. வருகிறது புதிய ரெட்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் அடுத்து ரெட்மி நோட் 14 ப்ரோ (Redmi Note 14 Pro) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த போன் வரும் வாரங்களில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக பட்ஜெட் விலையில் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் சில அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

ரெட்மி நோட் 14 ப்ரோ அம்சங்கள் (Redmi Note 14 Pro Specifications): சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 ( Snapdragon 7s Gen 3 SoC) சிப்செட் உடன் இந்த புதிய ரெட்மி போன் அறிமுகமாகும். எனவே இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரெட்மி போன் வெளிவரும்.

ரெடியா இருங்க..  வருகிறது புதிய ரெட்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

1.5கே அமோலெட் டிஸ்பிளே (1.5K AMOLED Display) வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 14 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் ட்ரிபிள் ரியர் கேமராக்கள் (Triple Cameras), 5000mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 256ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ரெட்மி போன் வெளிவரும்.

அதேபோல் ரெட்மி நோட் 14 ப்ரோ ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G)போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

ரெட்மி 13 5ஜி அம்சங்கள் (Redmi 13 5G specifications): 6.79-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 550 நிட்ஸ் ப்ரைடன்ஸ் வசதி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த போனின் டிஸ்பிளேவில் உள்ளன.

அதேபோல் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Snapdragon 4 Gen 2 Chipset) வசதியுடன் ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் Hyper OS சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதி கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு கிடைக்கும்.

108எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

குறிப்பாக 5030mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (33W fast charging) வசதியும் உள்ளது.

ரெடியா இருங்க..  வருகிறது புதிய ரெட்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) ஆதரவுகளுடன் ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர்கள் (Bottom-firing Speakers), 3.5எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm audio jack) வசதிகளும் இந்த போனில் உள்ளன.

ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA / NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வை-பை 806.11 ஏசி (Wi-Fi 6 802.11 ac), ஜிபிஸ் (GPS), புளூடூத் 5.1 (Bluetooth 5.1), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C)உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் ரூ.13,999 விலையில் அறிமுகமானது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 14 Pro specifications leaked online : Check All Details Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X