டிசம்பர் 9 வரை எந்த போனும் வாங்காதீங்க.. 90W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. இந்தியாவுக்கு வரும் Redmi 5ஜி போன்..
சீனாவில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 14 ப்ரோ (Redmi Note 14 Pro) மற்றும் ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் (Redmi Note 14 Pro Plus) போன்கள் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது இந்த போன்கள் வரும் டிசம்பர் 9-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ரெட்மி நிறுவனம் ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் போனின் டீசரை வெளியிட்டுள்ளது. அதுவும் SuperAI அம்சங்களுடன் இந்த ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் (Redmi Note 14 Pro Plus Specifications): 6.67-இன்ச் 1.5K ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே உடன் ரெட்மி நோட் 14 ப்ரோ போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 2560 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், எச்டிஆர் 10 பிளஸ், டால்பி விஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.
சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 3 4nm) சிப்செட் உடன் ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனில் வீடியோ எட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட்.
குறிப்பாக கேமிங் பயனர்களை கவரும் வகையில்அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் Hyper OS சார்ந்த ஆண்ட்ராய்டு 14 மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு உள்ளது.
ஸ்டார் சாண்ட் கிரீன், Mirror Porcelain White மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் இந்த போன் அறிமுகமாகும். மேலும் இந்த ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், டால்பி அட்மாஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி போர்ட்ரெயிட் டெலிபோட்டோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி செல்பி கேமரா கொண்டுள்ளது இந்த ரெட்மி போன்.
6200mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் போன். மேலும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த போனில் உள்ளன. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்தியாவில் ரூ.23,000 பட்ஜெட்டில் ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








