தட்டி தூக்குங்க.. ரூ.3000 நேரடி விலை குறைப்பு.. இந்த Redmi 5ஜி போனை வாங்க சரியான நேரம்!
ரெட்மி (Redmi) நிறுவனத்தின் அடுத்த நோட் சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆன ரெட்மி நோட் 15 ப்ரோ சீரீஸ் (Redmi Note 15 Pro Series) மாடல்களின் இந்திய அறிமுக தேதி அறிவிக்கப்பட்டதும், பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளம் ஆனது ரெட்மி நோட் 14 ப்ரோ சீரீஸ் (Redmi Note 14 Pro Series) ஸ்மார்ட்போன்களின் விலைகளை குறைத்துள்ளது
ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி சீரிஸின் கீழ் ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி (Redmi Note 15 Pro 5G) மற்றும் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் (Redmi Note 15 Pro Plus 5G) ஆகிய 2 மாடல்கள் வருகிற ஜனவரி 29 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவல் வெளியான வேகத்தில் பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி (Redmi Note 14 Pro 5G) மற்றும் ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 14 Pro Plus 5G) ஆகிய 2 மாடல்களின் விலைகளும் கடுமையாக குறைக்கப்பட்டுள்ளன.
தற்போது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன், அதன் அசல் அறிமுக விலையான ரூ.29,999 க்கு பதிலாக ரூ.3000 விலை குறைப்பை பெற்று ரூ.26,999 க்கு வாங்க கிடைக்கிறது.
இதேபோல ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன், அதன் அசல் அறிமுக விலையான ரூ.23,999 க்கு பதிலாக ரூ.2009 விலை குறைப்பை பெற்று ரூ.21,990 க்கு வாங்க கிடைக்கிறது.
200எம்பி கேமராக்களுடன் (200MP Camera) வரும் ரெட்மி நோட் 15 ப்ரோ சீரீஸ்: வருகிற ஜனவரி 29, 2026 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதோடு சேர்த்து இந்த ரெட்மி நோட் 15 ப்ரோ சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது 200எம்பி ப்ரைமரி கேமராவை கொண்டிருக்கும் என்பதையும் ஷாவ்மீ உறுதிப்படுத்தி உள்ளது.
என்ன விலைக்கு வரலாம் (Redmi Note 15 Pro Series Expected Price in India)? ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,000 - ரூ.28,000 என்கிற பட்ஜெட்டிலும், ரெட்மி நோட் 15 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டிலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் (Redmi Note 15 Pro Series Expected Specifications)? ரெட்மி நோட் 15 ப்ரோ மாடல் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா (MediaTek Dimensity 7400 Ultra) சிப்செட் மூலம் இயக்கப்படலாம். ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட் (Snapdragon 7s Gen 4 SoC) உடன் அறிமுகம் செய்யப்படலாம்.
டிஸ்பிளேவை பொறுத்தவரை இரண்டுமே 6.83-இன்ச் 1.5கே (1280×2772 பிக்சல்ஸ்) மைக்ரோ-கர்வ்டு டிஸ்பிளேக்களை கொண்டிருக்கலாம். இரண்டுமே 16ஜிபி வரை LPDDR4x ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS2.2 இன்டர்னல் ஸ்டோரேஜை வழங்கலாம்.
மேலும் இந்த இரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களுமே 22.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh பேட்டரிகளை கொண்டிருக்காலம். சார்ஜிங் ஸ்பீடில் சில வேறுபாடுகளை காணலாம்: அதாவது ப்ரோ பிளஸ் மாடலில் 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கையும், ப்ரோ மாடலில் 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








