Home
Mobile

போடு ஆர்டரை.. பட்ஜெட்ல ஸ்பெஷல் எடிஷன் போன்.. தூள் கிளப்பும் Redmi Note 14 ப்ரோ நியூ இயர் எடிஷன்.. விலை என்ன?

சியோமி (Xiaomi) நிறுவனத்திற்கு சொந்தமான ரெட்மி (Redmi) நிறுவனம் புதிதாக ரெட்மி நோட் 14 ப்ரோ நியூ இயர் எடிஷன் (Redmi Note 14 Pro New Year Edition) ஸ்மார்ட்போன் என்ற புதிய மிரட்டலான மொபைல் (Mobile) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. செக்க சிவந்த வானம் போல், நமது கண்களை கவரும் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இந்த போனில், ரெட்மி நிறுவனம் பல அட்டகாசமான அம்சங்களை நிரப்பியுள்ளது. இந்த போனின் விலை என்ன? இதை எப்படி குளோபல் சந்தையில் இருந்து ஆர்டர் செய்து வாங்குவது என்று விரிவாக பார்க்கலாம்.

புதிய ரெட்மி நோட் 14 ப்ரோ நியூ இயர் எடிஷன் (Redmi Note 14 Pro New Year Edition) ஸ்மார்ட்போன் சாதனம் புது 50 மில்லியன் பிக்சல் அம்சம் கொண்ட சோனி கேமராவை (New 50 million pixels Sony camera) கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சூப்பர் ஃபாஸ்ட் பெர்பார்மென்ஸ் (Performance) மற்றும் மிக துல்லியமான டிஸ்பிளே (clearer display) அம்சத்தை வழங்குகிறது.

போடு ஆர்டரை.. பட்ஜெட்ல ஸ்பெஷல் எடிஷன் போன்.. Redmi Note 14 ப்ரோ விலை?

போடு ஆர்டரை.. இந்த 2025ம் வருடத்தின் முதல் பட்ஜெட் ஸ்பெஷல் எடிஷன் போன்:

இந்த ரெட்மி 14 ப்ரோ ஸ்பெஷல் எடிஷன் 2025 (Redmi Note 14 Pro Special Edition 2025 Model) மாடல் 6.67" இன்ச் டிஸ்பிளேவை கண்களுக்கான பாதுகாப்பை வழங்கும் 2ம் தலைமுறை 1.5K ஐ ப்ரொடெக்ஷன் ஸ்கிரீன் (Second Generation 1.5K Eye Protection Screen) உடன் வழங்கியுள்ளது. இந்த டிஸ்பிளே 2712 x 1220 பிக்சல் உடன் 5,000,000:1 கான்ட்ராஸ்ட் ரேட்ஸியோவை (Contrast ratio) கொண்டுள்ளது.

இந்த டிஸ்பிளே 120Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) உடன் இன்ஸ்டடேனியஸ் 2160Hz டச் சாம்பிள் ரெட் (Up to 2160Hz instantaneous) ஆதரவை வழங்குகிறது. இது 45W ஃபாஸ்ட சார்ஜிங் (fast charging) உடன் 5500mAh பேட்டரியை (battery) ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் மீடியாடெக் டைமென்சிட்டி 7300 அல்ட்ரா சிப்செட் (MediaTek Dimensity 7300-Ultra chipset) உடன் இயங்குகிறது.

ரெட்மி நோட் 14 ப்ரோ நியூ இயர் எடிஷன் (Redmi Note 14 Pro New Year Edition):

இது 8GB ரேம் / 12GB ரேம் (RAM) அம்சத்தை கொண்டுள்ளது. இதன் ஸ்டோரேஜ் (Storage) பற்றி பேசுகையில், இந்த ரெட்மி நோட் 14 ப்ரோ நியூ இயர் எடிஷன் (Redmi Note 14 Pro New Year Edition) ஸ்மார்ட்போன் சாதனம் 128GB / 256GB / 512GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

இவை 8GB - 128GB, 8GB - 256GB, 12GB - 256GB, மற்றும் 12GB - 512GB வேரியண்ட் (Variant models) மாடலாக விற்பனைக்கு வந்துள்ளது. கேமரா அம்சம் நமது கவனத்தை ஈர்க்கிறது, காரணம் இதில் 50MP ட்ரிபிள் ரியர் கேமரா (Triple rear camera) அம்சம் உள்ளது. இது 50MP சோனி லார்ஜ் அபெச்சர் கொண்ட Sony LYT-600 sensor மெயின் கேமராவை OIS ஆதரவுடன் கொண்டுள்ளது.

ரெட்மி நோட் 14 ப்ரோ நியூ இயர் எடிஷன் விலை (Redmi Note 14 Pro New Year Edition Price):

இந்த மெயின் கேமரா 8MP சூப்பர் வைடு அங்கிள் லென்ஸ் (super wide angle lens) உடன் 2MP மேக்ரோ லென்ஸ் (Macro lens) கேமராவுடன் இணைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் இந்த சாதனம் 20MP செல்பி HD கேமராவை (HD selfie camera) கொண்டுள்ளது. இது 5ஜி (5G), 4ஜி (4G), 3ஜி (3G), 2ஜி (2G) ஆகிய நான்கு பேண்ட்களிலும் வேலை செய்கிறது.

ரெட்மி நோட் 14 ப்ரோ நியூ இயர் எடிஷன் (Redmi Note 14 Pro New Year Edition) ஸ்மார்ட்போனின் விலை பற்றி பேசுகையில், இதன்
- 8GB - 128GB மாடல் விலை $239.00 (இந்திய மதிப்பில் ரூ. 20,493)
- 8GB - 256GB மாடல் விலை $269.00 (இந்திய மதிப்பில் ரூ. 23,065)

- 12GB - 256GB மாடல் விலை $289.00 (இந்திய மதிப்பில் ரூ. 24,780)
- 12GB - 512GB மாடல் விலை $339.00 (இந்திய மதிப்பில் ரூ. 29,068) என்று www.geekwills.com தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. உலகம் முழுக்க இந்த ஸ்மார்ட்போன் டெலிவரி செய்யப்படுகிறது. பிற நாடுகளில் இந்த சாதனம் டெலிவரி செய்யப்பட 15 முதல் 20 நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்பது கவனிக்கத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 14 Pro New Year Edition 8GB 12GB RAM 128GB 256GB 512GB Variant Price Details Check Now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X