Home
Mobile

செப்டம்பர் 26 உறுதி.. 50MP கேமரா.. 67W சார்ஜிங்.. வருகிறது புதிய Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி நோட் 14 ப்ரோ (Redmi Note 14 Pro) ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர் 26-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதனுடன் ரெட்மி நோட் 14, ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் மாடல்களும் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போன் சீனாவில் அறிமுகமான ஒரு சில வாரங்களில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக இந்த ரெட்மி போன்கள் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு ரெட்மி நோட் 14 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

செப்டம்பர் 26 உறுதி.. வருகிறது புதிய Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

ரெட்மி நோட் 14 ப்ரோ அம்சங்கள் (Redmi Note 14 Pro Specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) உடன் அறிமுகமாகும். மேலும் 1220 x 2712 பிக்சல்ஸ், 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 2500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு மற்றும் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

அதேபோல் ரெட்மி நோட் 14 ப்ரோ ஸ்மார்ட்போனில் தரமான ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 7s Gen 3 chipset) வசதி உள்ளது. இந்த சிப்செட் மேமப்ட்ட செயல்திறன் வழங்கும். HyperOS சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவரும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் ரெட்மி நோட் 14 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 14 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

5000mAh பேட்டரி உடன் இந்த ரெட்மி நோட் 14 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 26 உறுதி.. வருகிறது புதிய Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) ஆதரவுடன் ரெட்மி நோட் 14 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் மிட்நைட் பிளாக், மிரர் Porcelain ஒயிட், ட்விலைட் பர்பிள் மற்றும் பாண்டம் ப்ளூ போன்ற நிறங்களில் இந்த ரெட்மி போன் வெளிவரும். அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

ரெட்மி நோட் 14 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் வெளிவரும். மேலும் ரூ.20,000-க்கு கீழ் இந்த புதிய ரெட்மி போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

photo credit: weibo.com, 91mobiles, redmi

Best Mobiles in India

English summary
Redmi Note 14 Pro Launch Date Revealed: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X