Home
Mobile

ஆளுக்கு 1 தூக்குவீங்க.. 90W சார்ஜிங்.. சோனி கேமரா.. அறிமுகமானது புதிய Redmi 5ஜி போன்கள்.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி நோட் 14 ப்ரோ (Redmi Note 14 Pro) மற்றும் ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் (Redmi Note 14 Pro Plus) ஸ்மார்ட்போன்களை இன்று சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் அறிமுகமாகும். இப்போது இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

ரெட்மி நோட் 14 ப்ரோ அம்சங்கள் (Redmi Note 14 Pro Specifications): 6.6-இன்ச் 1.5K ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே உடன் ரெட்மி நோட் 14 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,3000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 2560 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், எச்டிஆர் 10 பிளஸ், டால்பி விஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன.

ஆளுக்கு 1 தூக்குவீங்க.. அறிமுகமானது புதிய Redmi 5ஜி போன்கள்..

ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 Ultra 4nm)சிப்செட் உடன் ரெட்மி நோட் 14 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. மேலும் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் Hyper OS சார்ந்த ஆண்ட்ராய்டு 14 மூலம் இந்த போன் இயங்குகிறது.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என 4 வேரியண்ட்களில் ரெட்மி நோட் 14 ப்ரோ போன் விற்பனைக்கு வரும். ட்விலைட் பர்பிள், பாண்டம் ப்ளூ, மிட்நைட் பிளாக் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், டால்பி அட்மாஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

ஆளுக்கு 1 தூக்குவீங்க.. அறிமுகமானது புதிய Redmi 5ஜி போன்கள்..

50எம்பி சோனி எல்ஒய்டி-600 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 14 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் 20எம்பி செல்பி கேமரா, 5500mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Redmi Note 14 Pro Plus Specifications): 6.6-இன்ச் 1.5K ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே உடன் ரெட்மி நோட் 14 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 2560 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், எச்டிஆர் 10 பிளஸ், டால்பி விஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 3 4nm) சிப்செட் உடன் ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் போன் வெளிவந்துள்ளது. மேலும் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் Hyper OS சார்ந்த ஆண்ட்ராய்டு 14 மூலம் இந்த போன் இயங்குகிறது.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் ரெட்மி நோட் 14 ப்ரோ போன் விற்பனைக்கு வரும். ஸ்டார் சாண்ட் கிரீன், Mirror Porcelain White மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், டால்பி அட்மாஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

ஆளுக்கு 1 தூக்குவீங்க.. அறிமுகமானது புதிய Redmi 5ஜி போன்கள்..

50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி போர்ட்ரெயிட் டெலிபோட்டோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன். மேலும் 20எம்பி செல்பி கேமரா, 6200mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ரெட்மி நோட் 14 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 1499 yuan (இந்திய மதிப்பில் ரூ.17,879)-ஆக உள்ளது. பின்பு ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 1999 yuan (இந்திய மதிப்பில் ரூ.23,835)-ஆக உள்ளது. குறிப்பாக இந்த புதிய ரெட்மி போன்கள் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

photo credit: weibo.com, fonearena

Best Mobiles in India

English summary
Redmi Note 14 Pro and Redmi Note 14 Pro Plus launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X