இது புதுசா இருக்கே.. ரூ.21999 போதும்.. 3D டிஸ்பிளே.. 5500mAh பேட்டரி.. SONY கேமரா.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, சோனி எல்ஒய்டி சென்சார் கேமரா, 45W டர்போ சார்ஜ், 5500mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் பட்ஜெட் விலையில் வெளியாகி இந்திய மார்கெட்டில் தனி இடம்பிடித்த ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி (Redmi Note 14 Pro 5G) போனின் புதிய ஷாம்பெயின் கோல்டு (Champagne Gold) கலர் வேரியண்ட் களமிறங்கி இருக்கிறது. அதேபோல ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 14 Pro+ 5G) போனிலும் ஷாம்பெயின் கோல்டு வேரியண்ட் கிடைக்கிறது.
இந்த ரெட்மி நோட் 14 சீரிஸ் மாடல்களின் பீச்சர்கள், விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி போனில் ஐவி கிரீன் (Ivy Green), பாண்டம் பர்பிள் (Phantom Purple) மற்றும் டைட்டன் பிளாக் (Titan Black) ஆகிய கலர்கள் மட்டுமே கிடைத்தது. அதேபோல ப்ரோ பிளஸ் 5ஜி போனில் டைட்டன் பிளாக் (Titan Black), ஸ்பெக்டர் ப்ளூ (Spectre Blue) இருக்கிறது.

இதிலும் பாண்டம் பர்பிள் (Phantom Purple) கிடைக்கிறது. இந்த கலர்களுடன் இப்போது ஷாம்பெயின் கோல்டு கலர் வேரியண்ட் சேர்ந்துள்ளது. பிரீமியம் லுக் கொடுக்கும்படி இருப்பதால், மார்கெட்டில் வரவேற்பு பெற வாய்ப்புள்ளது. இந்த புதிய கலர் வேரியண்ட் வருகையால், விலையில் மாற்றம் இருக்கும் என்று நினைக்க வேண்டும். ஏற்கனவே இருந்த விலைகளிலேயே கிடைக்க இருக்கிறது.
ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி விலை (Redmi Note 14 Pro 5G Price): இந்த ரெட்மி ப்ரோவின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.22,999ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் ரூ.24,999ஆக இருக்கிறது. ஆக்சிஸ் பேங்க், எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,000 உடனடி டிஸ்கவுண்ட் போக ரூ.21,999 ஆரம்ப விலைக்கு வாங்க கிடைக்கிறது.
ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் 5ஜி விலை (Redmi Note 14 Pro+ 5G Price): இந்த ரெட்மி ப்ரோ பிளஸ் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.27,999ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.30,799ஆக இருக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.33,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாடலுக்கும் ரூ.1,000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை ரூ.26,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இந்த விலையுடன் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இப்போது, இந்த மாடல்களின் டிஸ்பிளே, சிப்செட், கேமரா மற்றும் பேட்டரி போன்ற முக்கிய பீச்சர்களை மட்டும் தெரிந்து கொள்ளலாம்.
இந்த மாடல்களில் 6.67 இன்ச் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. ப்ரோ மாடலில் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்ட்ரா 4என்எம் சிப்செட் மற்றும் ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 4என்எம் சிப்செட் கிடைக்கிறது. ப்ரோ மாடலில் 50 எம்பி சோனி சென்சார் மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது.
பிளஸ் மாடலில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் + 50 எம்பி டெலிபோட்டோ கிடைக்கிறது. ப்ரோ மாடலில் 5500mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. ப்ரோ பிளஸ் மாடலில் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6200mAh பேட்டரி கிடைக்கிறது 2 மாடல்களிலும் IP66 + IP68 மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








