Home
Mobile

மிரளுது ஆர்டர்.. ரூ.20,999 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 5500mAh பேட்டரி.. SONY கேமரா.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் ரெட்மி நோட் 14 ப்ரோ (Redmi Note 14 Pro) ஸ்மார்ட்போனுக்கு ஒரே நேரத்தில் விலை குறைப்பு மற்றும் பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே இருந்தும், 5500mAh பேட்டரி கொடுக்கிறது. சோனி எல்ஒய்டி சென்சார் கேமரா, IP69 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் போன்ற மற்ற பீச்சர்களும் மிரளவிடுகின்றன. இந்த ரெட்மி நோட் 14 ப்ரோ ஸ்மார்ட்போனின் விவரங்கள் இதோ.

மார்கெட்டில் வெளியாகியபோது, இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆக இருந்தது. ஆனால், இப்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.21,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஆகவே, நேரடியாக ரூ.3,000 விலை குறைப்பு கிடைக்கிறது. இதுபோக ரூ.1,000 பேங்க் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.20,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

மிரளுது ஆர்டர்.. ரூ.20,999 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 5500mAh பேட்டரி!

அதேபோல ரூ.26,999 விலையில் வெளியாகிய 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டானது, இப்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.23,999 விலைக்கு கிடைக்கிறது. இதுபோக ரூ.1,000 பேங்க் தள்ளுபடி பெற்று கொள்ளலாம். ஆகவே, இந்த வேரியண்ட்டை ரூ.22,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். 3டி கர்வ்ட் டிஸ்பிளே இருப்பதால், டிஸ்பிளே புரொடெக்சன் கிடைக்கிறது.

ஆகவே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorrila Glass Victus 2) பெற்று கொள்ளலாம். இதுபோக டாப்-லெவல் வாட்டர் புரொடெக்சன் கொடுக்கும்படி IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு பிரீமியம் டியூரபிலிட்டி கொடுத்து இருக்கிறது. இப்போது மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி அம்சங்கள் (REDMI Note 14 Pro 5G Specifications): இந்த ரெட்மி ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஹைப்பர் ஓஎஸ் (Hyper OS) கிடைக்கிறது. 3 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களையும், 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களையும் கொடுக்கிறது. இந்த ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 Ultra 4nm) சிப்செட் மற்றும் மாலி ஜிபியு கிராபிக்ஸ் கார்டு உள்ளது.

சோனி எல்ஒய்டி 600 (SONY LYT 600) சென்சார் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுடன் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா கிடைக்கிறது. 20 எம்பி செல்பீ கேமரா வருகிறது. டால்பி அட்மோஸ் (Dolby ATMOS) கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) கிடைக்கின்றன.

எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார் கிடைக்கிறது. இந்த ரெட்மி நோட் 14 ப்ரோ போனுக்கு 5500mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. ஸ்பெக்டர் ப்ளூ, டைட்டன் பிளாக் மற்றும் பாண்டம் பர்பிள் ஆகிய கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. சூப்பர் நோட் (SuperNote), ஏஐ ஸ்மார்ட் கிளிப் (AI Smart Clip), ஏஐ கிளியர் கேப்ச்சர் (AI Clear Capture) பீச்சர்கள் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
REDMI Note 14 Pro 5G With 50MP Camera Available At Discounted Price in Flipkart Check New Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X