Home
Mobile

என்ன சொல்றீங்க.. வெறும் ரூ.25,795 பட்ஜெட்.. 200MP கேமரா.. 5500mAh பேட்டரி.. விக்டஸ் 2 டிஸ்பிளே.. எந்த மாடல்?

குளோபல் மார்கெட்டே மிரளும்படியான பட்ஜெட்டில் 200 எம்பி கேமரா, 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5500mAh பேட்டரி, 12 ஜிபி ரேம் போன்ற பீச்சர்களுடன் ரெட்மி நோட் 14 ப்ரோ 4ஜி (REDMI Note 14 Pro 4G) களமிறங்கி இருக்கிறது. இந்த ரெட்மி போனின் பட்ஜெட், முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ரெட்மி நோட் 14 சீரிஸ் மாடல்கள் குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. இந்தியா உள்பட ஆசிய நாடுகளில் அடுத்த சில வாரங்களில் எதிர்பார்க்கலாம். இதில் ரெட்மி நோட் 14 ப்ரோ 4ஜி மாடலானது, பட்ஜெட்டில் 200 எம்பி கேமரா கொண்ட மாடலாக களமிறங்கி இருக்கிறது. ஏஐ கேமரா பீச்சர்களுடன் ரெட்மி பியர்களுக்கு பிரீமியம் அவுட்புட் கொடுக்க இருக்கிறது.

என்ன சொல்றீங்க.. வெறும் ரூ.25,795 பட்ஜெட்.. 200MP கேமரா.. எந்த மாடல்?

ரெட்மி நோட் 14 ப்ரோ 4ஜி அம்சங்கள் (REDMI Note 14 Pro 4G Specifications): இந்த குளோபல் வேரியண்ட்டில் ஓசன் ப்ளூ (Ocean Blue), மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் அரோரா பர்பிள் (Aurora Purple) ஆகிய கலர்கள் இருக்கின்றன. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) கொண்ட 200 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது.

மேலும், 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் சியோமி இமேஜ் என்ஜின் (Xiaomi Imaging Engine), 4X லாஸ்லெஸ் ஜூமிங், ஏஐ எரைஸ் ப்ரோ (AI Erase Pro), ஏஐ பியூட்டிபை (AI Beautify) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. 4K வீடியோ ரெக்கார்டிங் கிடையாது, 1080p ரெசொலூஷன் மட்டுமே கிடைக்கிறது. டிஸ்பிளேவில் பிரீமியம் காட்டி இருக்கிறது.

இந்த பட்ஜெட்டிலும் 6.67 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) வருகிறது. இந்த டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு, ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் பெற்று கொள்ளலாம்.

1920Hz டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது, பி3 கலர் காமட் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ரெட்மி நோட் 14 ப்ரோ 4ஜி போனில் பக்கா 4ஜி பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் ஹீலியோ ஜி100 அல்ட்ரா (Octa Core 6nm MediaTek Helio G100 Ultra) சிப்செட் வருகிறது. 1 டிபி மெமரி சிலாட் சப்போர்ட் கொண்ட 4 வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன.

ஆகவே, இந்த ரெட்மியில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் வர இருக்கிறது. அதேபோல 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டும் இருக்கிறது. சியோமி ஹைப்பர் எஸ் (Xiaomi Hyper OS) பேஸ்டு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது.

45W டர்போ சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரி வருகிறது. இப்போது, குளோபல் மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. ரூ.25,795 பட்ஜெட்டில் ஆரம்ப விலை இருக்கிறது. இதைவிட கம்மியான பட்ஜெட்டில் இந்திய மார்கெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. ஏனென்றால், 50 எம்பி கேமராவுடன் இந்தியாவில் வெளியான ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி வேரியண்ட் ரூ.25000 பட்ஜெட்டில் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 14 Pro 4G Goes Globally With 200MP Camera Previously Launched 5G Variant Gets 50MP
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X