டிச.13 முதல் விற்பனை.. மொத்த இந்தியாவும் வாங்க போகும் Redmi Note 14 சீரீஸ்.. 3 வகை பட்ஜெட்டில் 3 புது 5G போன்!
இந்தியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பி இருந்த ரெட்மி நோட் 14 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த சீரிஸின் கீழ் ரெட்மி நோட் 14 (Redmi Note 14), ரெட்மி நோட் 14 ப்ரோ (Redmi Note 14 Pro) மற்றும் ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் (Redmi Note 14 Pro Plus) என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகி உள்ளன
வருகிற 2024 டிசம்பர் 13 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வர உள்ள இந்த 3 புதிய ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயம் என்ன? இந்த 3 மாடல்களுக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் என்னென்ன? இதோ விவரங்கள்:

ரெட்மி நோட் 14 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது டியுவி ரெயிண்லேண்ட் (TUv Rheinland) சான்றிதழ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.67-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 7025 அல்ட்ரா சிப்செட் (MediaTek Dimensity 7025 Ultra) மூலம் இயக்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி ப்ரைமரி கேமரா + 2எம்பி இரண்டாம் நிலை லென்ஸ்-ஐ கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது. கூடவே பிங்கர் பிரிண்ட் சென்சார், ஐபி64 ரேட்டிங் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷனையும் கொண்டுள்ளது. கடைசியாக இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5110mAh பேட்டரியை கொண்டுள்ளது.
ரெட்மி நோட் 14 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது கார்னிங் கொரில்லா விக்டஸ் 2, டியுவி ரெயிண்லேண்ட் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் ஓஎல்இடி கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 70300 அல்ட்ரா சிப்செட் (Mediatek Dimensity 7300 Ultra) மூலம் இயக்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி ப்ரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 8எம்பி மூன்றாம் நிலை லென்ஸ்-ஐ கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 20எம்பி செல்பீ கேமரா உள்ளது. வேகன் லெதர் பினிஷ் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் ஐபி66, ஐபி67, ஐபி69 ரேட்டிங்களுக்கானஆதரவும் உள்ளது.கடைசியாக இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5500mAh பேட்டரியை கொண்டுள்ளது.
ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது கார்னிங் கொரில்லா விக்டஸ் 2 மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் ஓஎல்இடி கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 7s Gen 3 Chipset) மூலம் இயக்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி ஷாவ்மீ கஸ்டம் சூப்பர் சென்சார் பிளாக்ஷிப் லைட் ஹண்டர் 800 (Xiaomi Custom Super Sensor Flagship Light Hunter 800) கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 50எம்பி போர்ட்ரெய்ட் டெலிஃபோட்டோ கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 20எம்பி செல்பீ கேமரா உள்ளது.
தூசி மற்றும் நீர்-எதிர்ப்பிற்கான ஐபி66, ஐபி68 மற்றும் ஐபி69 ரேட்டிங்கை கொண்டுள்ள ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6200mAh பேட்டரியை கொண்டுள்ளது. கடைசியாக ஷாவ்மீ ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi HyperOS)கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போனிற்கு 4 வருட அப்டேட்கள் கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது
ரெட்மி நோட் 14 சீரிஸின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள்: ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,999 க்கும் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,999 க்கும் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.20,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 128ஜிபி ரூ.23,999 க்கும் 8ஜிபி + 256ஜிபி ரூ.25,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடைசியாக உள்ள ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.29,999 க்கும், 8ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் ரூ.31,999 க்கும் மற்றும் 8ஜிபி + 512ஜிபி ஆப்ஷன் ரூ.34,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட அனைத்து 3 மாடல்களின் அனைத்து வேரியண்ட்களுமே வருகிற டிசம்பர் 13 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் எம்ஐ.காம் (Mi.com), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் அனைத்து ஷாவ்மீ ரீடெய்ல் பார்ட்னர்களின் வழியாகவும் வாங்க கிடைக்கும். ரெட்மி நோட் 14 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து, இந்நிறுவனம் சியோமி சவுண்ட் அவுட்டோர் ஸ்மார்ட் ஸ்பீக்கர் (ரூ.3499), ரெட்மி பட்ஸ் 6 வயர்லெஸ் இயர்பட்ஸ் (ரூ.299) மற்றும் சியோமி அல்ட்ரா ஸ்லிம் பவர்பேங்க் (க்ரவுட் ஃபண்டிங் மூலம் ரூ.1499) ஆகியவற்றையும் வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








