பின்றானே இவன்.. ரூ.14,300 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 5110mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்த பட்ஜெட்டல இவ்வளவு பீச்சர்களாக, யாருப்பா அவன் பின்றானே என்று கேட்கும் அளவுக்கு ரூ.15,000-க்கும் மலிவான விலையில் ஃபுல்எச்டிபிளஸ் ரெசொலூஷன் கொண்ட சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, விர்ச்சுவல் ரேம் கொண்ட 12 ஜிபி ரேம், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5110mAh பேட்டரி மற்றும் சோனி எல்ஒய்டி சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமராவுடன் ரெட்மி நோட் 14 5ஜி (Redmi Note 14 5G) போன் வெளியாகி இருக்கிறது. இந்த போனின் விவரம் இதோ.
ரெட்மி நோட் 14 5ஜி அம்சங்கள் (Redmi Note 14 5G Specifications): இந்த ரெட்மி நோட் போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் கொண்ட 6.67 இன்ச் (1080 × 2400 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (Super AMOLED Display) வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் வருகிறது.

120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. மேலும், அவுட்டோர் அவுட்புட் கொடுக்கும் 2100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இதுபோக 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த ரெட்மி நோட் 14 5ஜி போனில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல்கள் வருகின்றன.
மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் மாடலும் வெளியாகி இருக்கின்றன. இதுபோக மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) பயன்படுத்த முடியும். சியோமி ஹைபர் ஓஎஸ் (Xiaomi Hyper OS) வருகிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி அல்ட்ரா 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7025 Ultra 6nm) சிப்செட் வருகிறது.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ஐஎம்எக்ஸ் பிஎக்ஸ்எம் 8 356 ஜிபியு (IMG BXM 8 256 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. ஆகவே, பட்ஜெட்டில் பக்கா பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். மிட்-ரேஞ்ச் போன்களில் வரும் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. 2 எம்பி மேக்ரோ கேமரா உள்ளது.

இந்த ரெட்மி நோட் 14 5ஜி போனில் 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. மிட்-ரேஞ்ச் போன்களில் கிடைக்கும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வருகிறது. வழக்கமான இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் 3.5 எம்எம் இயர்போன் ஜாக் (Earphone Jack) வருகிறது.
பெரிய பேட்டரி சிஸ்டம் பேக் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5110mAh பேட்டரி வருகிறது. ஸ்டார்ரி ஒயிட் (Starry White), பான்டம் ப்ளூ (Phantom Blue) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த ரெட்மி நோட் போனின் 6 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.14,300ஆக இருக்கிறது.
8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.16,685ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மாடலின் விலை ரூ.17,875ஆகவும் இருக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் மாடலின் விலை ரூ.20,260ஆக இருக்கிறது. சீனாவில் வெளியாகி இருக்கிறது. வரும் நாட்களில் விற்பனை தொடங்குகிறது. இந்தியாவில் ஒருசில வாரங்களில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications