அடுத்த ரெட்மி 5ஜி போன் ரெடி.. AMOLED டிஸ்பிளே.. 33W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் அடுத்து ரெட்மி நோட் 14 5ஜி (Redmi Note 14 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. அதாவது இந்த புதிய போன் வரும் வாரங்களில் இந்தியா மற்றும் உலக நாடுகளில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த புதிய போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
ரெட்மி நோட் 14 5ஜி அம்சங்கள் (Redmi Note 14 5G Specifications): 1.5கே அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) உடன் ரெட்மி நோட் 14 5ஜி போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் (MediaTek Dimensity 6100+) சிப்செட் கொண்டுள்ளது ரெட்மி நோட் 14 5ஜி போன். மேலும் ஆர்ம் மாலி ஜி57 எம்பி2 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு, ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம், 50எம்பி பிரைமரி கேமரா, 33W சார்ஜிங், 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த ரெட்மி நோட் 14 5ஜி போன் வெளிவரும்.
குறிப்பாக ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. கூடிய விரைவில் இதன் முழு அம்சங்களும் வெளியாகும். மேலும் ரெட்மி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி ஏ3எக்ஸ் (Redmi A3x) ஸ்மார்ட்போனின் அம்சங்கள் இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ரெட்மி ஏ3எக்ஸ் அம்சங்கள் (Redmi A3x specifications) : இந்த ரெட்மி ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போன் 6.71-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி எச்டி பிளஸ் (IPS LCD HD+) டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்தது . மேலும் 1650 x 720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) ப்ரொடெக்ஷன், டிசி டிம்மிங் (DC Dimming) உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.
இந்த ரெட்மி ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போன் யுனிசாக் டி603 சிப்செட் (Unisoc T603 chipset) உடன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போனில் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதி உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த போனில் மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
ரெட்மி ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
அதேபோல 8எம்பி மெயின் கேமரா + QVGA கேமரா என்கிற டூயல் ரியர் அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா வசதி இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போன். மேலும் ஏஐ ஃபேஸ் அன்லாக் ( AI face unlock), சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) கொண்டு வெளிவந்துள்ளது ரெட்மி ஏ3எக்ஸ் போன்.
இந்த ரெட்மி ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 10 வாட்ஸ் சார்ஜிங் (10W charging) வசதியும் உள்ளது. 3ஜிபி ரேம் கொண்ட ரெட்மி ஏ3எக்ஸ் போனின் விலை ரூ.6,999-ஆக உள்ளது. பின்பு இதன் 4ஜிபி ரேம் வேரியண்ட் விலை ரூ.7,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








