சர்ர்னு விலை குறைந்த ஃபேமஸ் Redmi 5ஜி போன்.. ரூ.3000 ஆபரில் புது 108MP மாடல் வந்ததும் Amazon, Flipkart அதிரடி!
ரெட்மி (Redmi) நிறுவனத்தின் புத்தம் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆக ரெட்மி நோட் 15 5ஜி மாடல் இன்று (ஜன.6) இந்தியாவில் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போனின் 8GB ரேம் மற்றும் 128ஜிபி ஆப்ஷன் ரூ.19,999 க்கும், 256ஜிபி ஆப்ஷன் ரூ.21,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
இந்த விலை - வங்கி தள்ளுபடியை உள்ளடக்கிய விலை நிர்ணயம் ஆகும். அதாவது மேற்கண்ட ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் அசல் அறிமுக விலை முறையே ரூ.22,999 மற்றும் ரூ.24,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை வருகிற ஜனவரி 9 ஆம் தேதி முதல் ஷாவ்மீ வலைத்தளம், பிளிப்கார்ட், அமேசான் வழியாக தொடங்கும்.

இதற்கிடையில் புதிய ரெட்மி நோட் 15 5ஜி மாடல் அறிமுகமானதும் பழைய ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ரூ.17,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட் ஆகிய 2 தளங்களிலும் குறைக்கப்பட்ட விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது
அமேசான் இந்தியாவில் ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.16,498 க்கும், பிளிப்கார்ட் வலைதளத்தில் ரூ.16.396 க்கும் வாங்க கிடைக்கிறது. அதாவது அமேசான் ரூ.1501 விலை குறைப்பை வழங்குகிறது. மறுகையில் உள்ள பிளிப்கார்ட் வலைத்தளம் ஆனது ரூ.1603 விலை குறைப்பை வழங்குகிறது.
ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது டியுவி ரெயிண்லேண்ட் (TUv Rheinland) சான்றிதழ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.67-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 7025 அல்ட்ரா சிப்செட் (MediaTek Dimensity 7025 Ultra) மூலம் இயக்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி ப்ரைமரி கேமரா + 2எம்பி இரண்டாம் நிலை லென்ஸ்-ஐ கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது. கூடவே பிங்கர் பிரிண்ட் சென்சார், ஐபி64 ரேட்டிங் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷனையும் கொண்டுள்ளது. கடைசியாக இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5110mAh பேட்டரியை கொண்டுள்ளது.
புதிய ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு கொண்ட ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 2 கொண்டு இயங்குகிறது. இது 4 ஆண்டுகளுக்கான ஓஎஸ் மற்றும் 6 ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்பாட்டகளை பெறும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனுக்கு கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஹைப்பர்ஓஎஸ் 3 ஒடிஏ அப்டேட் கிடைக்கும் என்று ரெட்மி நிறுவனம் கூறுகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.77-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 8GB LPDDR4X ரேம் மற்றும் 256GB வரையிலான UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. சுவாரசியமாக இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியிலான மெமரி விரிவாக்கத்தையும் ஆதரிக்கிறது.
கேமராக்களை பொறுத்தவரை ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 108-மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமராவை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 20 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. இதன் ரியர் கேமராக்கள் 4K 30 fps வரை வீடியோ பதிவை ஆதரிக்கின்றன, அதே நேரத்தில் செல்பீ கேமரா 1080p 30 fps ரெக்கார்டிங்கை வழங்கும்.
பேட்டரியை பொறுத்தவரை ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 45W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 18W ரிவர்ஸ் சார்ஜிங் கொண்ட 5,520mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP65 ரேட்டிங்கை கொண்டுள்ளது
ஏஐ பேஸ் அன்லாக் ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் இன் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சாரும் உள்ளது. மேலும் இது 5G, 4G LTE, Wi-Fi, USB டைப்-சி போர்ட், ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ் மற்றும் என்எப்சி ஆகிய கனெக்டிவிட்டி ஆதரவுகளையும் கொண்டுள்ளது. டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ உடனான ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது. கடைசியாக அளவீட்டில் இது 164 x 75.42 x 7.35மிமீ மற்றும் எடையில் 178 கிராம் உள்ளது.


Click it and Unblock the Notifications








