3 மாசம் ஆகியும் மவுசு குறையல.. ஆபர் விலையில் மீண்டும் விற்பனை ஆர்மபம்.. புது லுக்கில் Redmi 5G போன்!
கடந்த டிசம்பர் 2024 இல் ரெட்மி நோட் 14 சீரீஸின் (Redmi Note 14 Series) கீழ் அறிமுகமான வெண்ணிலா வேரியண்ட் புதிய கலர் ஆப்ஷனை பெற்றுள்ளது. அது ரெட்மி நோட் 14 5ஜி (Redmi Note 14 5G) மாடல் ஆகும்.
நினைவூட்டும் வண்ணம் இது ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி (Redmi Note 14 Pro 5G) மற்றும் ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 14 Pro Plus 5G) உடன் சேர்ந்து இந்தியாவில் அறிமுகமாகின.

இந்திய அறிமுகத்தின் போது இது மிஸ்டிக் ஒயிட், பாண்டம் பர்பில் மற்றும் டைட்டன் பிளாக் ஆகிய 3 கலர்களில் மட்டுமே அறிமுகமானது. தற்போது இது புதிய ஐவி கிரீன் கலர் ஆப்ஷனை பெற்றுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.18,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாகும்.
இது 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களிலும் வாங்க கிடைக்கும். இவைகளின் விலைகள் முறையே ரூ.19,999 மற்றும் ரூ.21,999 ஆகும். விற்பனை சலுகைகளை பொறுத்தவரை ஐசிஐசிஐ (ICICI), எச்டிஎப்சி (HDFC) மற்றும் எஸ்பிஐ (SBI) கிரெடிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டு வழியிலான இஎம்ஐ (EMI) பரிவர்த்தனைகளில் ரூ.1,000 உடனடி தள்ளுபடிகிடைக்கும்.
ரெட்மி நோட் 14 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது டியுவி ரெயிண்லேண்ட் (TUv Rheinland) சான்றிதழ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.67-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 7025 அல்ட்ரா சிப்செட் (MediaTek Dimensity 7025 Ultra) மூலம் இயக்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி ப்ரைமரி கேமரா + 2எம்பி இரண்டாம் நிலை லென்ஸ்-ஐ கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது. கூடவே பிங்கர் பிரிண்ட் சென்சார், ஐபி64 ரேட்டிங் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷனையும் கொண்டுள்ளது. கடைசியாக இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5110mAh பேட்டரியை கொண்டுள்ளது.
ரெட்மி நோட் 14 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது கார்னிங் கொரில்லா விக்டஸ் 2, டியுவி ரெயிண்லேண்ட் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் ஓஎல்இடி கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 70300 அல்ட்ரா சிப்செட் (Mediatek Dimensity 7300 Ultra) மூலம் இயக்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி ப்ரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 8எம்பி மூன்றாம் நிலை லென்ஸ்-ஐ கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 20எம்பி செல்பீ கேமரா உள்ளது. வேகன் லெதர் பினிஷ் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் ஐபி66, ஐபி67, ஐபி69 ரேட்டிங்களுக்கானஆதரவும் உள்ளது.கடைசியாக இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5500mAh பேட்டரியை கொண்டுள்ளது.
ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது கார்னிங் கொரில்லா விக்டஸ் 2 மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் ஓஎல்இடி கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 7s Gen 3 Chipset) மூலம் இயக்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி ஷாவ்மீ கஸ்டம் சூப்பர் சென்சார் பிளாக்ஷிப் லைட் ஹண்டர் 800 (Xiaomi Custom Super Sensor Flagship Light Hunter 800) கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 50எம்பி போர்ட்ரெய்ட் டெலிஃபோட்டோ கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 20எம்பி செல்பீ கேமரா உள்ளது.
தூசி மற்றும் நீர்-எதிர்ப்பிற்கான ஐபி66, ஐபி68 மற்றும் ஐபி69 ரேட்டிங்கை கொண்டுள்ள ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6200mAh பேட்டரியை கொண்டுள்ளது. கடைசியாக ஷாவ்மீ ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi HyperOS)கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போனிற்கு 4 வருட அப்டேட்கள் கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது


Click it and Unblock the Notifications








