தூக்குங்கடா அந்த தங்கத்த.. பட்ஜெட்ல SONY கேமரா.. 5110mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 12GB ரேம்.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் பிரியர்கள் விரும்பும்படியான பட்ஜெட் விலையில் சோனி எல்ஒய்டி சென்சார் மெயின் கேமரா, சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, சியோமி ஹைப்பர் ஓஎஸ், 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5110mAh போன்ற பீச்சர்களுடன் வெளியான ரெட்மி நோட் 14 5ஜி (Redmi Note 14 5G) போனின் ஐவி கிரீன் வேரியண்ட் களமிறங்கி இருக்கிறது. இந்த புது வேரியண்ட்டின் விலை, விற்பனை மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரெட்மி நோட் 14 5ஜி போனில் ஏற்கனவே டைட்டன் பிளாக் (Titan Black), மிஸ்டிக் ஒயிட் (Mystique White) மற்றும் பாண்டம் பர்பிள் (Phantom Purple) ஆகிய கலர்கள் இருக்கின்றன. இப்போது, ஐவி கிரீன் (Ivy Green) வேரியண்ட் அறிமுகமாகி இருக்கிறது. முந்தைய வேரியண்ட்களின் விலையே இந்த மாடலுக்கும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த கலர் ரெட்மி தளத்தில் மட்டுமே ஆர்டருக்கு கிடைக்கிறது.

இந்த ரெட்மி நோட் 14 5ஜி போனின் 6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சவல் ரேம்) + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.18,999ஆக இருக்கிறது. இப்போது, ரூ.1000 டிஸ்கவுண்ட் போக ரூ.17,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இதைவிட மலிவான விலைக்கு பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் கிடைக்கலாம். ஆனால், ஐவி கிரீன் ரெட்மி தளத்தில் மட்டுமே கிடைப்பதால், இந்த விலை இருக்கிறது.
ஆகவே, மற்ற ஈ-காமர்ஸ் தளங்களில் இந்த ஐவி கிரீன் வேரியண்ட் விற்பனைக்கு வரும்போது, ரூ.17,999 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு வாங்கி கொள்ளலாம். இந்த பட்ஜெட்டுக்கு கேமரா, டிஸ்பிளே மற்றும் சிப்செட் பீச்சர்கள் பக்காவாகவே இருக்கிறது. இந்த பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். பிறகு உங்களுக்கு ஏற்ற மாடலாக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ரெட்மி நோட் 14 5ஜி அம்சங்கள் (Redmi Note 14 5G Specifications): இந்த ரெட்மி போனில் 2 ஓஎஸ் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. ஏஐ எரைஸ் (AI Erase), ஏஐ மேஜிக் ஸ்கை (AI Magic Sky) மற்றும் ஏஐ ஆல்பம் (AI Album) போன்ற பீச்சர்களை கொடுக்கும் சியோமி ஹைப்பர் ஓஎஸ் (Xiaomi Hyper OS) சப்போர்ட் கிடைக்கிறது.
இந்த பட்ஜெட்டில் வரவேற்கும்படி ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 அல்ட்ரா (Octa Core 6nm MediaTek Dimensity 7025 Ultra) சிப்செட் கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் வேரியண்ட் மட்டும் கிடையாது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்களும் இருக்கின்றன. இந்த மூன்று மாடல்களுக்கும் மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கிடைக்கிறது.
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு மற்றும் 6.67 இன்ச் (1080 × 2400 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த மிட்-பிரீமியம் டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா-வைடு + 2 எம்பி மேக்ரோ கேமரா இருக்கிறது.
20 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் வருவதால், அவுட்புட் குவாலிட்டியாக இருக்கும். இந்த ரெட்மி நோட் 14 5ஜி போனில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இதற்கு 5110mAh பேட்டரி வருகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட் போன்ற பீச்சர்களையும் இந்த போன் கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications








