Home
Mobile

இதான் டா கம்பேக்.. ரூ.12,000 க்கு 120Hz OLED டிஸ்பிளே, 12GB ரேம், IP64.. Redmi-யின் புதிய 5G போன்!

ஷாவ்மீ (Xiaomi) நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி (Redmi) பிராண்டிங்கின் கீழ் ரெட்மி நோட் 14 5ஜி (Redmi Note 14 5G) ஸ்மார்ட்போன் ஆனது. கடந்த மாதம் சீனாவில் அறிமுகமானது. தற்போது இது கூடிய விரைவில், இந்தியா உட்பட உலகளாவிய சந்தைங்களில் அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு, ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் (Redmi Note 14 Pro Plus) மாடலுக்கு அனுமதி கிடைத்த சில நாட்களுக்குப் பிறகு இந்த தகவல் வெளியாவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

குறிப்பிடத்தக்க வகையில், ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவுடன் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி நோட் 14 5ஜி மற்றும் ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போன்கள் என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இந்திய சந்தையில் என்ன மாதிரியான விலைக்கு அறிமுகம் செய்யப்படும்? இதோ விவரங்கள்:

இதான் டா கம்பேக்.. ரூ.12,000 க்கு Redmi-யின் புதிய 5G போன்!

ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: பெரும்பாலும் சீனாவில் அறிமுகமான அதே ரெட்மி நோட் 14 5ஜி வேரியண்ட் தான் இந்தியாவிலும் அறிமுகமாகும். அதன்படி இது 1.5கே ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2100 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.67-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை, இது மீடியாடெக் டைமன்சிட்டி 7025 அல்ட்ரா எஸ்ஓசி-ஐ (MediaTek Dimensity 7025 Ultra SoC) கொண்டுள்ளது. இது 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது.

செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய 16 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர் உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, இது ஒரு பெரிய 5110mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. மேலும் இது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் கஸ்டம் ஸ்கின் கொண்டு இயங்குகிறது.

ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போனின் மற்ற குறிப்பிடத்தக்க அம்சங்களை பொறுத்தவரை, இது ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ப்ளூடூத் 5.3, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங், டூயல் சிம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷன் ஆகியவைகளை கொண்டுள்ளது.

ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போனின் உலகளாவிய மாறுபாடு 200 மெகாபிக்சல் சாம்சங் S5KHP3 சென்சார் + 8 மெகாபிக்சல் சோனி IMX355 சென்சார் + 2 மெகாபிக்சல் OV02B10 சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய டிரிபிள் ரியர் கேமரா யூனிட்டைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிப்செட்டை பொறுத்தவரை, ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் உலகளாவிய மாறுபாடு ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 எஸ்ஓசி (Snapdragon 7s Gen 3 SoC) மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான (ரெட்மி நோட் 14 5ஜி மாடலில் உள்ள) அதே 6.67-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை பெறலாம்.

ரெட்மி நோட் 14 5ஜி மற்றும் ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை நிர்ணயம் என்னவாக இருக்கும்? ரெட்மி நோட் 14 5ஜி மாடல் ரூ.12,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுகையில் உள்ள ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் 5ஜி மாடல் ரூ.22,990 க்கு வெளியாகலாம். சரியான விலை நிர்ணயம் அறிமுகத்தின் போதே தெரிய வரும். Photo Courtesy: @chehonz201

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 14 5G Global Launch What We Know So Far
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X