Home
Mobile

Redmi நீ கலக்கு.. ரூ.22,000 பட்ஜெட்ல புது 5G போன்... சர்ர்னு சறுக்கி ரூ.15,000 க்கு வந்த முந்தைய மாடல்!

இவ்ளோ கம்மியா விலைக்கு வருதா என்று ஆச்சரியப்படுத்தும் வண்ணம் - 2026 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ரெட்மி ஸ்மார்ட்போன் ஒன்றின் விலை நிர்ணயம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அது ரெட்மி நோட் 15 5ஜி (Redmi Note 15 5G) ஸ்மார்ட்போன் ஆகும்.

இது வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. டிப்ஸ்டர் அபிஷேக் யாதவிடமிருந்து கிடைத்த தகவலின்படி ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்திய சந்தையில் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகமாகும்.

Redmi நீ கலக்கு.. சர்ர்னு சறுக்கி ரூ.15,000 க்கு வந்த முந்தைய மாடல்!

அது 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம்+ 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் ஆகும். இதில் பேஸிக் ஸ்டோராஜ் ஆப்ஷன் ஆன 128ஜிபி மாடல் ஆனது ரூ.22,999 க்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும், மறுகையில் உள்ள 256ஜிபி மாடல் ஆனது ரூ.24,999 க்கு அறிமுகம் செய்யப்படும் என்றும் மேற்குறிப்பிட்ட டிப்ஸ்டர் கூறுகிறார்.

புதிய ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போனின் விலை குறித்த விவரங்கள் லீக் ஆன வேகத்தில் முன்னதாக அறிமுகமான ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போனின் விலை கடுமையாக குறைந்துள்ளது. நினைவூட்டும் வண்ணம், இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,999 க்கு இந்தியாவில் அறிமுகமானது.

ஆனால் தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது நேரடியாக ரூ.3000 விலை குறைப்பை பெற்றுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் இதே ஸ்டோரேஜ் ஆப்ஷன் பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.15,164 க்கு வாங்க கிடைக்கிறது; அதாவது அமேசானை விட அதிக விலைக்கு கிடைக்கிறது. ஆக பிளிப்கார்ட் தான் லாபகரமான சாய்ஸ்.

ரெட்மி நோட் 14 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது டியுவி ரெயிண்லேண்ட் (TUv Rheinland) சான்றிதழ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.67-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 7025 அல்ட்ரா சிப்செட் (MediaTek Dimensity 7025 Ultra) மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி ப்ரைமரி கேமரா + 2எம்பி இரண்டாம் நிலை லென்ஸ்-ஐ கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது. கூடவே பிங்கர் பிரிண்ட் சென்சார், ஐபி64 ரேட்டிங் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷனையும் கொண்டுள்ளது. கடைசியாக இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5110mAh பேட்டரியை கொண்டுள்ளது.

ரெட்மி ரெட்மி நோட் 15 சீரீஸ்: ரெட்மி நோட் 15 சீரீஸின் கீழ் இப்போதைக்கு ரெட்மி நோட் 15 5ஜி மாடல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் (Redmi Note 15 Pro Plus) மற்றும் ரெட்மி நோட் 15 ப்ரோ (Redmi Note 15 Pro) ஆகிய மாடல்களும் வருமா என்பதில் தெளிவு இல்லை

ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா செட்டப்பில் "புதிய" 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. மறுகையில் உள்ள ரெட்னி நோட் 15 ப்ரோ மாடலில் 108 மெகாபிக்சல் சென்சார் பேக் செய்யப்படலாம். ஆனாலும் இந்த இரண்டு போன்களும் சீன வேரியண்ட்களில் உள்ள அதே சிப்செட் மற்றும் அதே டிஸ்பிளேவை தான் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

ரெட்மி நோட் 15 ப்ரோ மாடல் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா (MediaTek Dimensity 7400 Ultra) சிப்செட் மூலம் இயக்கப்படலாம். ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட் (Snapdragon 7s Gen 4 SoC) உடன் அறிமுகம் செய்யப்படலாம்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இரண்டுமே 6.83-இன்ச் 1.5கே (1280×2772 பிக்சல்ஸ்) மைக்ரோ-கர்வ்டு டிஸ்பிளேக்களை கொண்டிருக்கலாம். இரண்டுமே 16ஜிபி வரை LPDDR4x ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS2.2 இன்டர்னல் ஸ்டோரேஜை வழங்கலாம். மேலும் இந்த இரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களுமே 22.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh பேட்டரிகளை கொண்டிருக்காலம். சார்ஜிங் ஸ்பீடில் சில வேறுபாடுகளை காணலாம்: அதாவது ப்ரோ பிளஸ் மாடலில் 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கையும், ப்ரோ மாடலில் 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 14 5G gets Rs 3000 Price Just After Redmi Note 15 5G India Price Leak
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X