Home
Mobile

வெயிட்டான விலை குறைப்பு.. 5ஜி, 50MP கேமரா, IP64 ரேட்டிங், 5110mAh பேட்டரி.. Redmi ஃபேன்ஸ் அசெம்பிள்!

இந்தியாவில் உள்ள ரெட்மி ரசிகர்களே "அசெம்பிள்" ஆகுங்கள்.. அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு வருடம் ஆகியும் கூட வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக உள்ள ரெட்மி நோட் 14 5ஜி (Redmi Note 14 5G) ஸ்மார்ட்போன் மீது விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விலை குறைப்பு ரெட்மி நோட் 15 சீரிஸின் (Redmi Note 15 Series) இந்திய அறிமுகத்திற்கு சற்று முன்பாக வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆக ரெட்மி ஃபேன்ஸ் - பழைய மாடல் மற்றும் புதிய மாடல்கள் - எதன் மீது உங்களுக்குஆர்வம் இருந்தாலும் அதை வாங்குவதற்கான நேரம் வந்துவிட்டது.

வெயிட்டான விலை குறைப்பு.. Redmi ஃபேன்ஸ் அசெம்பிள்!

புதிய ரெட்மி நோட் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று ஷாவ்மீ உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சீரிஸின் கீழ் மொத்தம் 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.

அவைகள் - ரெட்மி நோட் 15 5ஜி (Redmi Note 15 5G), ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி (Redmi Note 15 Pro 5G) மற்றும் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 15 Pro Plus 5G) ஆகிய 3 மாடல்கள் ஆக இருக்கலாம்.

இதற்கிடையில் தான் இந்திய சந்தையில் கடந்த 2024 இல் ரூ.17,999 என்கிற விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.1,500 குறைக்கப்பட்டு ரூ.16,499 க்கு வாங்க கிடைக்கிறது.

கூடுதலாக எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு மூலம் ரூ.1,000 தள்ளுபடியைப் பெறலாம், இதன் மூலம் ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை ரூ.15,499 ஆக குறைக்க முடியும். இந்த ஸ்மார்ட்போனின் மீது இஎம்ஐ சலுகைகளும் உள்ளன, மேலும் இந்த ஸ்மாட்போனை ஷாவ்மீ இந்தியா (Xiaomi India) வலைத்தளத்தில் இருந்து நேரடியாக வாங்கலாம்.

ரெட்மி நோட் 14 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது டியுவி ரெயிண்லேண்ட் (TUv Rheinland) சான்றிதழ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.67-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 7025 அல்ட்ரா சிப்செட் (MediaTek Dimensity 7025 Ultra) மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி ப்ரைமரி கேமரா + 2எம்பி இரண்டாம் நிலை லென்ஸ்-ஐ கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது. கூடவே பிங்கர் பிரிண்ட் சென்சார், ஐபி64 ரேட்டிங் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷனையும் கொண்டுள்ளது. கடைசியாக இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5110mAh பேட்டரியை கொண்டுள்ளது.

ரெட்மி நோட் 14 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது கார்னிங் கொரில்லா விக்டஸ் 2, டியுவி ரெயிண்லேண்ட் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் ஓஎல்இடி கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 70300 அல்ட்ரா சிப்செட் (Mediatek Dimensity 7300 Ultra) மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி ப்ரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 8எம்பி மூன்றாம் நிலை லென்ஸ்-ஐ கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 20எம்பி செல்பீ கேமரா உள்ளது. வேகன் லெதர் பினிஷ் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் ஐபி66, ஐபி67, ஐபி69 ரேட்டிங்களுக்கானஆதரவும் உள்ளது.கடைசியாக இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5500mAh பேட்டரியை கொண்டுள்ளது.

ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது கார்னிங் கொரில்லா விக்டஸ் 2 மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் ஓஎல்இடி கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 7s Gen 3 Chipset) மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி ஷாவ்மீ கஸ்டம் சூப்பர் சென்சார் பிளாக்ஷிப் லைட் ஹண்டர் 800 (Xiaomi Custom Super Sensor Flagship Light Hunter 800) கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 50எம்பி போர்ட்ரெய்ட் டெலிஃபோட்டோ கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 20எம்பி செல்பீ கேமரா உள்ளது. இது 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6200mAh பேட்டரியை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 14 5G gets Price Cut Ahead Redmi Note 15 Launch in India on 2026 January 6
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X