வெச்சி செஞ்சிட்டாங்க.. ரூ.16,000 பட்ஜெட்ல 5030mAh பேட்டரி.. 1 டிபி மெமரி.. வெட் டச் டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்த 5ஜி போன் வரட்டும், அப்புறம் வேற மாடல்களை பார்க்கலாமென்று காத்திருக்க வைக்கும்படியான பட்ஜெட்டில் 12ஜிபி ரேம், 1டிபி மெமரி, 5030mAh பேட்டரி, 50எம்பி கேமரா போன்ற அம்சங்களுடன் ரெட்மி நோட் 13ஆர் (Redmi Note 13R) போன் வெளியாகி இருக்கிறது.
ரெட்மி நோட் 13ஆர் அம்சங்கள் (Redmi Note 13R Specifications): இந்த ரெட்மி நோட் மாடலில் 6.79 இன்ச் (2460 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட எல்சிடி (LCD) டிஸ்பிளே மாடலாகும்.

240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. வெட் டச் கன்ட்ரோல் (Wet Touch Control) மற்றும் டிரிபிள் ரைன்லேண்ட் ஐ புரொடெக்சன் (Triple Rheinland Eye Protection) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் சியோமி ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi HyperOS) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்டிருக்கிறது.
மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் கொண்ட அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட் வருகிறது. இந்த சிப்செட் அட்வான்ஸ்ட் எடிஷன் (Advanced Edition) மாடலாகும்.
இந்த ரெட்மி நோட் 13ஆர் போனில் அல்ட்ரா-கிளியர் டூயல் கேமரா (Ultra-clear Dual Camera) வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ சென்சார் வருகிறது. இந்த கேமராவில் எச்டிஆர் மோட் (HDR Mode), நைட் சீன் மோட் (Night Scene) போன்ற பீச்சர்கள் வருகின்றன.

அதேபோல போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) மற்றும் ஃபிலிம் ஃபில்டர்கள் (Film Filters) வருகின்றன. 8 எம்பி செல்பீ ஷூட்டரிலும் போர்ட்ராய்டு மோட் வருகிறது. இந்த போனில் 6 ஜிபி ரேம் +128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.
அதேபோல 12 ஜிபி ரேம் +256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்களும் இருக்கின்றன. இந்த ரெட்மி நோட் 13ஆர் போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5030mAh பேட்டரி வருகிறது. ஸ்மார்ட் சார்ஜிங் என்ஜின் (Smart Charging Engine) வருகிறது.
1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட், டூயல் நானோ சிம் சிலாட், பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர்கள், டைப்-சி போர்ட் மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் வருகிறது. இன்பிராரெட் சென்சார் மற்றும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொண்டிருக்கிறது. டவுள்-சைடெட் கிளாஸ் பாடி (Double-sided Glass Body) கொண்டிருக்கிறது.
பிரீமியம் டிசைனில் மிட்நைட் பிளாக் (Midnight Dark), ஐஸ் கிரிஸ்டல் சில்வர் (Ice Crystal Silver) மற்றும் லைட் சீ ப்ளூ (Light Sea Blue) ஆகிய 3 கலர்களில் வருகிறது. இந்த போனின் 6ஜிபி 128ஜிபி மாடலின் விலை ரூ.16,133ஆகவும், 8ஜிபி + 128ஜிபி மாடலின் விலை ரூ.18,440ஆகவும் இருக்கிறது.
அதேபோல 8ஜிபி + 256ஜிபி மாடலின் விலை ரூ.20,746ஆகவும், 12ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.23,053ஆகவும், 12ஜிபி + 512ஜிபி மாடலின் விலை ரூ.25,360ஆகவும் இருக்கிறது. இந்த போன் சீனாவில் அறிமுகமாகி இருக்கிறது. விரைவில் விற்பனை தொடங்குகிறது. அதன்பிறகு இந்தியாவில் வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications








