Home
Mobile

ஃபயரு பட்ஜெட்.. வெறும் ரூ.23,525 போதும்.. 108MP கேமரா.. 12GB ரேம்.. 1TB மெமரி.. எந்த மாடல்?

மிரளவிடும் 108 எம்பி கேமராவுடன் 12ஜிபி ரேம், 1 டிபி மெமரி சப்போர்ட், 5000mAh பேட்டரி போன்ற பக்காவான அம்சங்களை கொண்ட ரெட்மி நோட் 13ஆர் ப்ரோ (Redmi Note 13R Pro) கம்மியான பட்ஜெட்டில் வெளியாகிறது. இதுகுறித்த விவரம் இதோ.

ரெட்மி நோட் 13ஆர் ப்ரோ அம்சங்கள் (Redmi Note 13R Pro Specifications): இந்த ரெட்மி ப்ரோ போன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் மற்றும் மாலி - ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டிருக்கிறது.

ரூ.23,525 போதும்.. 108MP கேமரா.. 12GB ரேம்.. 1TB மெமரி.. எந்த மாடல்?

அதோடு எம்ஐயுஐ 14 (MIUI 14) ஓஎஸ் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 6.67 இன்ச் (1080 × 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (Super AMOLED Display) கொண்ட மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

அதோடு 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1920Hz PWM டிம்மிங், 10 பிட் கலர் டெப்த் சப்போர்ட் வருகிறது. அதுமட்டுமல்லமால், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு கொண்டுள்ளது. இந்த ரெட்மி நோட் 13ஆர் ப்ரோ மாடலில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது.

இந்த மெமரியோடு 1 டிக்கான மைக்ரோ எஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, எஸ்டி கார்டு சிலாட் மற்றும் டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) வருகிறது. இந்த ரெட்மி நோட் 13ஆர் ப்ரோ போனில் எல்இடி பிளாஷ் லைட்டுடன் கூடிய பக்காவான டூயல் ரியர் கேமரா செட்டப் வருகிறது.

ரூ.23,525 போதும்.. 108MP கேமரா.. 12GB ரேம்.. 1TB மெமரி.. எந்த மாடல்?

அந்த வகையில், 108 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த ரெட்மி போனில் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) சப்போர்ட் உள்ளது. அதேபோல சைடு மவுண்டெட் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) கொண்டுள்ளது.

இந்த போனில் 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ப்ரோ மாடலில் 5000mAh பேட்டரி வருகிறது. அதோடு 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த பேட்டரியோடு சேர்த்து 174.3 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. ஆகவே, மிகவும் ஸ்லிம் டிசைனில் விற்பனைக்கு வர இருக்கிறது.

இந்த ரெட்மி நோட் 13ஆர் ப்ரோ போனின் கனெக்டிவிட்டி அம்சங்களை பார்க்கையில், 5ஜி எஸ்ஏ (5G SA), டூயல் 4ஜி (Dual 4G) டூயல் பேண்ட் வை-பை 802 (Dual Band Wi-Fi 802), ப்ளடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகியவை வருகின்றன. மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் டைம் ப்ளூ (Time Blue) ஆகிய 2 கலர்கள் கொண்டிருக்கிறது.

இந்த போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,525 ஆக நிர்ணயம் செய்யப்பட இருப்பதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அம்சங்கள் மற்றும் விலை விவரங்களை கசிந்த தகவல்களாகும். இந்த போன் வரும் நவம்பர் 20ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்பின்பு அடுத்தடுத்த நாடுகளில் வெளியாகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 13R Pro With 12GB RAM, Dimensity 6080 Launch on November 20 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X