ஆர்டர் பிச்சிக்குது.. 108MP கேமரா.. 256GB மெமரி.. 33W சார்ஜிங்.. அறிமுகமானது புதிய Redmi போன்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி நோட் 13ஆர் ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த புதிய ரெட்மி நோட் 13ஆர் ப்ரோ ஆனது தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியா மற்றும் உலக நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைமன்சிட்டி சிப்செட், 108எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த ரெட்மி நோட் 13ஆர் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது ரெட்மி நோட் 13ஆர் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விவிரக்குறிப்புகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான போன். அதேபோல் இந்த போன் பஞ்ச்-ஹோல் டிசைன் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2400 x 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 2160 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே தனித்துவமான திரை அனுபவத்தை வழங்கும். பின்பு 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி நோட் 13ஆர் ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
ரெட்மி நோட் 13ஆர் ப்ரோ ஸ்மார்ட்போனில் தரமான டைமன்சிட்டி 6080 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரெட்மி போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
108எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 13ஆர் ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.
இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் சைடு பேஸிங் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side Facing Fingerprint Scanner) கொண்டு வெளிவந்துள்ளது ரெட்மி நோட் 13ஆர் ப்ரோ ஸ்மார்ட்போன். பின்பு இதில் ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) ஆதரவும் உள்ளது.

33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 13ஆர் ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் தரும். அதேசமயம் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். பின்பு இந்த போனின் எடை 175 கிராம் ஆகும்.
5ஜி, டூயல் சிம், ஜிபிஎஸ், வைஃபை 5, புளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் விலை 1999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.23,200) ஆக உள்ளது. தற்போது இந்த போன் சீனாவில் வாங்க கிடைக்கிறது. அதேபோல் ரெட்மி நோட் 13ஆர் ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் போக்கோ எக்ஸ்6 நியோ எனும் பெயரில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








