சரவெடி ரெட்மி.. வெறும் ரூ.13,640 போதும்.. 108MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ரெட்மி பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களும் மிரளும் விதமாக வெறும் ரூ.13,640 பட்ஜெட்டில் 108 எம்பி கேமரா மட்டுமல்லாமல், அமோலெட் டிஸ்பிளே, 33W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் ரெட்மி நோட் 13 (Redmi Note 13) வெளியாகயிருக்கிறது.
ரெட்மி நோட் 13 அம்சங்கள் (Redmi Note 13 Specifications): இந்த நோட் மாடலில் பிரம்மாண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. 108 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

இந்த ரெட்மி நோட் 12 மாடலில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் வருகிறது. அதோடு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் எம்ஐயுஐ 14 (MIUI 14) ஓஎஸ் வருகிறது.
இந்த ரெட்மி போனில் 6.67 இன்ச் (1080×2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (Full HD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1920Hz டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.
அதோடு 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் உள்ளது. மொத்தமாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொண்டிருக்கிறது. இந்த போன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொண்டுள்ளது. இதற்கு டைப்-சி சார்ஜிங் போர்ட் வருகிறது.
IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் வருகிறது. இந்த போன் சாண்ட் ஒயிட் (Sand White), மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் டைம் ப்ளூ (Time Blue) ஆகிய மூன்று கலர்களில் வருகிறது. இந்த ரெட்மி போனில் சைடு பேஸிங் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side Facing Fingerprint Scanner) கொண்டுள்ளது.
3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm Audio Jack) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) இருக்கிறது. இதன் கனெக்டிவிட்டி சப்போர்ட் அம்சங்களை பொறுத்தவரை, 5ஜி எஸ்ஏ (5G SA), டூயஸ் 4ஜி (Dual 4G), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS) மற்றும் வை-பை 802 (Wi-Fi 802) ஆகியவை வருகின்றன.
இந்த ரெட் போன் சீனாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.13,640ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.15,005ஆகவும், 8ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.17,315ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,625ஆக இருக்கிறது. இவ்வளவு மலிவான விலையில் 108 எம்பி கேமரா கிடைப்பதால், இந்திய ஸ்மார்ட்போன் பிரியர்கள் இடையே அந்த போனுக்கான எதிர்பார்ப்பு கிளம்பிவிட்டது. இந்த சூழலில் வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில், ரெட்மி நோட் 13 போன் அதன் சீரிஸ் உடன் வெளியாகும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








