Home
Mobile

விஸ்வரூப விலை.. வெறும் ரூ.13,640 போதும்.. 108MP கேமரா.. 5000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ரெட்மி பிரியர்களை தட்டித்தூக்கும்படி வெறும் ரூ.13,640 பட்ஜெட்டில் 108எம்பி கேமரா, சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பக்க பிரீமியம் அம்சங்களை கொண்ட ரெட்மி நோட் 13 (Redmi Note 13) போன் விரைவில் வருகிறது.

ரெட்மி நோட் 13 அம்சங்கள் (Redmi Note 13 Specifications): இந்த ரெட்மி நோட் மாடலில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்டிருக்கிறது.

ரூ.13640 விலை.. 108MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி போன்!

பக்காவான மாலி - ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. எம்ஐயுஐ 14 (MIUI 14) ஓஎஸ் சப்போர்ட் உள்ளது. இந்த ரெட்மி நோட் 13 போனில் 6.67 இன்ச் (1080×2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.

இதுவொரு சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு வருகிறது. அதுமட்டுமல்லாமல், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

இந்த ரெட்மி போன் கம்மியான பட்ஜெட்டில் பிரம்மாண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டிருக்கிறது. ஆகவே, 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு எல்இடி பிளாஷ் லைட் வருகிறது. அதே போல 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

இந்த போன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. அதோடு 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட அதிக விலை கொண்ட வேரியண்ட்டும் வருகிறது.

டூயல் நானோ சிம் மற்றும் எஸ்டி கார்டு சிலாட் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் சப்போர்ட் உள்ளது. 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm Audio Jack) வருகிறது. அதேபோல சைடு மவுண்ட்டெட் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side Mounted Fingerprint Scanner) இருக்கிறது.

இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. 5ஜி எஸ்ஏ (5G SA), டூயல் 4ஜி (Dual 4G), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS), வை-பை 802 (Wi-Fi 802) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் டைம் ப்ளூ (Time Blue), சாண்ட் ஒயிட் (Sand White) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) ஆகிய மூன்று கலர்கள் வருகின்றன. இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.13,640ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.15,005ஆகவும் இருக்கிறது.

அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.17,315ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.19,625ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் சீனாவில் விற்பனைக்கு வந்து மிகப்பெரும் வரவேற்பு பெற்றுவருகிறது.

இதனால், மற்ற நாடுகளில் இருக்கும் ரெட்மி பிரியர்கள் அந்த போனுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் சிங்கப்பூரில் ஐஎம்டிஏ சர்டிபிகேஷனுக்கு சென்றுள்ளது. ஆகவே, இந்த போனுடன் சேர்த்து ரெட்மி நோட் 13 சீரிஸ் மாடல்கள் குளோபல் லாஞ்ச் செய்யப்பட இருப்பது உறுதியாகிவிட்டது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 13 With 12GB RAM, 108MP Camera Dimensity 6080 To Global Launch Soon Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X