Home
Mobile

ஜன.4 காலி.. ரூ.20,999 போதும்.. 108MP கேமரா.. 12GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

108 எம்பி கேமரா, 12ஜிபி ரேம், 5000mAh பேட்டரி, அமோலெட் டிஸ்பிளே போன்ற ப்ரீமியம் அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் ரெட்மி நோட் 13 5ஜி (Redmi Note 13 5G) போன் வெளியாக இருக்கிறது. இதன் விலை விவரங்கள் இப்போது, கசிந்துள்ளது.

இந்த ரெட்மி போனில் 6 ஜிபி ரேம் (6ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. அதோடு 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் வருகிறது.

ரூ.20,999 போதும்.. 108MP கேமரா.. 12GB ரேம்.. AMOLED டிஸ்பிளே போன்!

அதேபோல ப்ரிசம் கோல்டு (Prism Gold), ஆர்டிக் வைட் (Arctic White) மற்றும் ஸ்டீல்த் பிளாக் (Stealth Black) ஆகிய 3 கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.20,999ஆக இருக்கிறது.

அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.22,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆகவும் இருக்கிறது. இந்த போனில் 108 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது.

அதோடு 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. இந்த ரெட்மி நோட் 13 போன் வரும் ஜனவரி 4ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது. மேற்கூறிய அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் மட்டுமே மார்கெட் வட்டாரங்களில் கசிந்து, ரெட்மி பிரியர்களை அறக்க பறக்க செய்துள்ளது.

சொல்லப்போனால், இந்த ரெட்மி நோட் 13 போன் ஏற்கனவே சீன மார்கெட்டில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்றுவிட்டது. இந்த போனின் அம்சங்களே பெரும்பாலும், இந்தியாவில் வெளியாகும் வேரியண்ட்டில் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. ஆகவே, அந்த சீன வேரியண்ட்டின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

ரெட்மி நோட் 13 அம்சங்கள் (Redmi Note 13 Specifications): இந்த போனில் 6.67 இன்ச் (1080×2400 பிக்சல்கள்) புல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

அதோடு 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) கொண்டிருக்கிறது. இந்த ரெட்மியில் ஆண்ட்ராய்டு 13 (Android 13) ஓஎஸ் மற்றும் எம்ஐயுஐ 14 (MIUI 14) சப்போர்ட் வருகிறது.

அதோடு ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல மாலி ஜி57 ஜிபியு (Mali-G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 173.5 கிராம் எடை கொண்டுள்ளது.

100 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது. அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. ஆனால், இந்திய வேரியண்ட்டில் டிரிபிள் ரியர் செட்டப் வருகிறது. IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. இந்த ரெட்மியில் 5ஜி என்எஸ்ஏ, டூயல் 4ஜி போன்ற கனெக்டிவிட்டிகள் வருகின்றன.

Best Mobiles in India

English summary
Redmi Note 13 With 108MP Camera, 12GB RAM Launch on January 4 in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X