மொத்த இந்தியாவும் எதிர்பார்க்கும் Redmi போன்கள்.. தேதியை குறிச்சி வச்சுக்கோங்க.. 200MP கேமரா.. எந்த மாடல்?
வரும் 2024 ஜனவரி 4-ம் தேதி இந்தியாவில் ரெட்மி நோட் 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது ரெட்மி நோட் 13, ரெட்மி நோட் 13 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
குறிப்பாக இந்த மூன்று ரெட்மி போன்களும் அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் தற்போது ஆன்லைனில் கசிந்துள்ளது. இப்போது ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் அம்சங்களைப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Redmi Note 13 Pro+): மீடியாடெக் டைமன்சிட்டி 7200 அல்ட்ரா (MediaTek Dimensity 7200 Ultra) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போன். மேலும் ஜி610 எம்சி4 ஜிபியு (Mali - G610 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 13 ( Android 13) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் அறிமுகமாகும்.
குறிப்பாக இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போனுக்கு வழங்கப்பட்டுள்ள சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். எனவே கேமிங் பயனர்கள் இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போனை நம்பி வாங்கலாம். 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளேசதியுடன் அறிமுகமாகும். 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1800 நிட்ஸ் ப்ரைட்னஸ், 2160 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், டால்பி விஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே தனித்துவமான திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
இந்த ரெட்மி போனில் இந்த போனில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speaker) உள்ளன. மேலும் இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.
OIS ஆதரவு கொண்ட 200எம்பி Samsung ISOCELL HP3 கேமரா + 8எம்பி சோனி IMX355 சென்சார் (அல்ட்ரா வைடு கேமரா) + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் இந்த ரெட்மி போன் அறிமுகமாகும்.
அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 5000 எம்ஏச் பேட்டரி வசதியுடன் இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் (In-displat fingerprint scanner), ஐபி68 ரேட்டிங், டூயல் சிம், 5ஜி, வைஃபை 6, புளூடூத் 5.3,என்எப்சி,ஜிபிஎஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் உடன் அறிமுகமாகும் ரெட்மி நோட் 13 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 13 ஸ்மார்ட்போன்களும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். அதேபோல் இந்த மூன்று புதிய போன்களும் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








