Home
Mobile

அடுத்தடுத்த ரெட்மி சம்வம்.. ரூ.20,000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 108MP கேமரா.. இப்போது இந்தியா.. அப்புறம் குளோபல்!

ரெட்மி நோட் 13 (Redmi Note 13 Series) சீரிஸ் போன்களின் சர்வதேச வெளியீடு வரும் ஜனவரி 15ஆம் தேதி நடக்கிறது. அதோடு ரெட்மி வாட்ச் 4 மாடலும் வெளியாகிறது. ஆனால், மொபைல் சீரிஸ் மட்டும், இந்தியாவில் இன்று வெளியாக இருக்கின்றன.

ஆகவே, ஜனவரி 15ஆம் தேதிக்கு பிறகே ரெட்மி வாட்ச் 4 மாடலை இந்தியாவில் எதிர்பார்க்க முடியும். இருப்பினும், சீனாவில் ஏற்கனவே வெளியாகிவிட்டதால், அங்கு அதற்கு கொடுக்கப்பட்ட அம்சங்கள், விலையிலேயே குளோபல் வேரியண்ட்டும் வெளியாக வாய்ப்புள்ளது.

ரெட்மி வாட்ச் 4 அம்சங்கள் (Redmi Watch 4 Specifications): இந்த வாட்ச் 1.97 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) கொண்டிருக்கிறது. ஆக்சிலெரேஷன் சென்சார், கைரோ சென்சார், ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார், பிளட் ஆக்ஸிஜன் லெவல் சென்சார் ஆகியவை வருகின்றன.

அடுத்தடுத்த ரெட்மி சம்வம்! ரூ.20,000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 108MP கேமரா!

அதேபோல டெய்லி ஆக்டிவிட்டி டிராக்கிங், ஃபீமேல் மென்சுரல் சைக்கிள் டிராக்கிங் மற்றும் ஸ்ட்ரெஸ் மானிட்டரிங் சப்போர்ட் வருகிறது. 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. 150+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் மற்றும் வாய்ஸ் கோச் சப்போர்ட் வருகிறது. ஜிபிஎஸ், ப்ளூடூத் 5.3 மற்றும் என்எப்சி சப்போர்ட் உள்ளது.

20 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும் 470mAh பேட்டரி வருகிறது. எலிகன்ட் பிளாக் மற்றும் சில்வர் ஸ்னோவ் வைட் ஆகிய 2 கலர்கள் கொண்டிருக்கிறது. அதோடு மெட்டாலிக், லெதர் மற்றும் லைலான் ஆகிய ஸ்ட்ராப் வேரியண்ட்கள் வர இருக்கின்றன. இந்த ரெட்மி வாட்ச் 4 மாடலின் விலை ரூ.5,957ஆக இருக்கிறது.

இதேபோல, ரெட்மி நோட் 13 சீரிஸ் போன்களின் விலையும், அம்சங்களும் சீன வேரியண்ட்களை போலவே இருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்தியாவில் இன்று வெளியாக இருப்பதால், நமக்கு குளோபல் வேரியண்ட்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. ஆகவே, இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்களை பார்ப்போம்.

ரெட்மி நோட் 13 அம்சங்கள் (Redmi Note 13 Specifications): 108 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. 6.67 இன்ச் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. டைமன்சிட்டி 6080 6என்எம் சிப்செட் கொண்டுள்ளது. 33W சார்ஜிங் + 5000mAh பேட்டரி வருகிறது.

அடுத்தடுத்த ரெட்மி சம்வம்! ரூ.20,000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 108MP கேமரா!

இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.20,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.22,999ஆகவும் இருக்கிறது. அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆகவும் இருக்கிறது.

ரெட்மி நோட் 13 ப்ரோ அம்சங்கள் (Redmi Note 13 Pro Specifications): 6.67 இன்ச் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் மொபைல் சிப்செட் கொண்டிருக்கிறது. 67W சார்ஜிங் + 5100mAh பேட்டரி வருகிறது. 200 எம்பி மெயின் + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது.

அடுத்தடுத்த ரெட்மி சம்வம்! ரூ.20,000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 108MP கேமரா!

இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.28,999ஆக இருக்கிறது. அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.30,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.32,999ஆக இருக்கிறது.

ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Redmi Note 13 Pro Plus Specifications): 6.67 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே வருகிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 7200 அல்ட்ரா 4என்எம் சிப்செட் கொண்டுள்ளது. 120W சார்ஜிங் + 5000mAh பேட்டரி வருகிறது. 200 எம்பி மெயின் + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது.

அடுத்தடுத்த ரெட்மி சம்வம்! ரூ.20,000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 108MP கேமரா!

இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.33,999ஆக இருக்கிறது. அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.37,999ஆக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 13 Series Global Launch Set For January 15 With Redmi Watch 4 Check Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X