ஆளுக்கொன்னு வாங்கும் பட்ஜெட்.. 200எம்பி கேமரா.. 16ஜிபி ரேம்.. 67W ஃபாஸ்ட் சார்ஜிங்.. அசத்தும் Redmi போன்..
ரெட்மி நிறுவனம் விரைவில் ரெட்மி நேர் 13 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் தான் அறிமுகம் செய்யப்படும். அதன்பின்பு தான் உலக சந்தை மற்றும் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரெட்மி நோட் 13 ப்ரோ ஆனது சீனாவில் 3சி சான்றிதழைப் பெற்றுள்ளது. குறிப்பாக இந்த போனின் மாடல் நம்பர் 2312DRA50C என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

விரைவில் அறிமுகமாகும் ரெட்மி நோட் 13 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 7200 (Mediatek Dimensity 7200) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு இந்த புதிய ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போன் அறிமுகமாகும்.
ஆனால் இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் உடனே கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம். அதேபோல் இந்த போன் தரமான கேமரா அமைப்புடன் வெளிவரும்.
அதாவது 200எம்பி சாம்சங் எச்பி3 ( Samsung HP3) பிரைமரி கேமரா+ 8எம்பி சோனி ஐஎம்எஸ்355 சென்சார் (Sony IMX355 sensor) அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபள் ரியர் கேமராவுடன் இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன். குறிப்பாக டிஎஸ்எல்ஆர் கேமராக்களை விட இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
6.67-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே கொண்டு இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே ஒரு தனி அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம்.
குறிப்பாக ரெட்மி நோட் 13 ப்ரோ போனில் 8ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. எனவே இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவைக் கொண்டுள்ளது ரெட்மி ஸ்மார்ட்போன்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.20,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications