Home
Mobile

அடிச்சு தூக்கும் பட்ஜெட்.. வெறும் ரூ.17,320 போதும்.. 200MP கேமரா.. 12GB ரேம்.. 5100mAh பேட்டரி.. எந்த போன்?

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் 200எம்பி கேமரா, ஓஎல்இடி டிஸ்பிளே, 12ஜிபி ரேம், 67W சார்ஜிங், 5100mAh பேட்டரி போன்ற பிரம்மாண்ட அம்சங்களை கொண்ட ரெட்மி நோட் 13 ப்ரோ (Redmi Note 13 Pro) போன் பட்ஜெட் விலையில் வெளியாக இருக்கிறது.

ரெட்மி நோட் 13 ப்ரோ அம்சங்கள் (Redmi Note 13 Pro Specifications): இந்த மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் வருகிறது. அதோடு எம்ஐயூஐ 14 ஓஎஸ் மற்றும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

ரூ.17320 போதும்.. 200MP கேமரா.. 12GB ரேம்.. 5100mAh பேட்டரி மாடல்!

இந்த போனில் 6.67 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்பு கொண்டிருக்கிறது. அதோடு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.

மேலும், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த ரெட்மி போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது.

அதேபோல 12ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களும் இருக்கின்றன. சாம்சங் எச்பி3 (Samsung HP3) சென்சார் கொண்ட 200 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சார் கொண்ட 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது.

இந்த மேக்ரோவில் ஓம்னிவிஷன் ஓவி02பி10 (Omnivsion OV02B10) சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவொரு ஓஐஎஸ் கேமரா மாடலாகும். அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இதில் ஓம்னிவிஷன் ஓவி16ஏ1க்யூ (Omnivision OV16A1Q) சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ போனில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5100mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

ஸ்டார் சாண்ட் ஒயிட், மிட்நைட் டார்க், டைம் ப்ளூ மற்றும் ஷாலோ ட்ரீம் ஆகிய நான்கு கலர்கள் கொண்டுள்ளது. இந்த ரெட்மி போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.17,320 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.18,190 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.20,785ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.23,100ஆகவும் இருக்கிறது. சீனாவில் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் விற்பனைக்கு வந்து மிகப்பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த விலைக்கு இவ்வளவு அம்சங்கள் கிடைப்பது முதல்முறையாகும்.

ஆகவே, இதன் குளோபல் வேரியண்ட் அறிமுகத்துக்கு மற்ற நாடுகளில் இருக்கும் ரெட்மி பிரியர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில், இந்த போன் இந்திய வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. முன்னதாக, பிஐஎஸ் சான்றிதழ் பெற்றிருந்த நிலையில், அதன் வெளியீட்டு மாதம் கசிந்துள்ளது. வரும் டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில், இந்த போன் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 13 Pro With 200MP Camera Tipped To Launch on December in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X