Home
Mobile

சுட சுட வந்தாச்சு.. வெறும் ரூ.23,999 போதும்.. 200MP கேமரா.. OLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

வெயிட் பண்ண வெச்சதுக்கு வொர்த்தானு கேட்டால், பக்கா வொர்த்து பாஸ் என்று சொல்லும் அளவுக்கு ரெட்மி நோட் 13 ப்ரோ மற்றும் நோட் 13 ப்ரோ பிளஸ் போன்கள் மிரளவிடும் அம்சங்களுடன் பட்ஜெட்டில் வெளியாகியிருக்கின்றன.

ரெட்மி நோட் 13 ப்ரோ, நோட் 13 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Redmi Note 13 Pro, Note 13 Pro Plus Specifications): இந்த போன்களில் 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) ஓஎல்இடி டிஸ்பிளே வருகிறது. ப்ரோ மாடலில் பிளாட் டிஸ்பிளேவும், ப்ரோ பிளஸ் மாடலில் கர்வ்ட் டிஸ்பிளேவும் கொடுக்கப்பட்டுள்ளது.

 ரூ.23,999 போதும்.. 200MP கேமரா.. OLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி!

இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அதோடு 1920Hz PWM டிம்மிங், 12 பிட் கலர் டெப்த், டால்பி விஷன், எச்டிஆர்10 பிளஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது. மொத்தமாக கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வருகிறது.

ரெட்மி நோட் 13 ப்ரோவில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் மொபைல் சிப்செட் மற்றும் ப்ரோ பிளஸ் போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200-அல்ட்ரா 4என்எம் சிப்செட் வருகிறது. 2 போன்களிலும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல 200 எம்பி மெயின் கேமரா (சாம்சங் எச்பி3 சென்சார்) + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்டிருக்கின்றன. 16 எம்பி செல்பீ வருகிறது. ப்ரோவில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5100mAh பேட்டரி வருகிறது. ப்ரோ பிளஸ் மாடலில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.

 ரூ.23,999 போதும்.. 200MP கேமரா.. OLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி!

ரெட்மி நோட் 13 ப்ரோ போனில் ஆர்டிக் ஒயிட், கோரல் பர்பிள் மற்றும் மிட்நைட் பிளாக் ஆகிய கலர்கள் வருகின்றன. அதேபோல ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போனில் ப்யூசன் ஒயிட் (Fusion White), ப்யூசன் பர்பிள் (Fusion Purple) மற்றும் ப்யூசன் பிளாக் (Fusion Black) ஆகிய கலர்கள் இருக்கின்றன.

ரெட்மி நோட் 13 ப்ரோ, நோட் 13 ப்ரோ பிளஸ் விலை (Redmi Note 13 Pro, Note 13 Pro Plus Price): ரெட்மி நோட் 13 ப்ரோ போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.25,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.27,999 ஆகவும் இருக்கிறது.

அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.29,999ஆக இருக்கிறது. அதேபோல ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.31,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.33,999 ஆகவும் இருக்கிறது.

மேலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35,999ஆக இருக்கிறது. இந்த விலையில் அறிமுக சலுகையாக ரூ.2000 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இந்த தள்ளுபடியை ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி பெற்ற கொள்ளலாம்.

ஆகவே, ப்ரோ மாடலை ரூ.23,999 விலையிலும், ப்ரோ பிளஸ் மாடலை ரூ.29,999 விலையிலும் வாங்கி கொள்ள முடியும். பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் சியோமி இந்தியா (Xiaomi India) தளத்தில் இந்த போன்களை ஆர்டர் செய்து கொள்ளலாம். வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 13 Pro With 200MP Camera Sale From January 10 on Flipkart India Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X