Home
Mobile

சம்பவம் உறுதி.. தேதி குறிச்சாச்சு.. வெறும் ரூ.28,999 போதும்.. 200MP கேமரா.. 5100mAh பேட்டரி.. எந்த போன்?

இந்திய கேமரா பிரியர்களை மிரளவிடும் விதமாக வெறும் ரூ.28,999 பட்ஜெட்டில் 200எம்பி மெயின் கேமரா, 12ஜிபி ரேம், 67W சார்ஜிங், 5100mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் ரெட்மி நோட் 13 ப்ரோ (Redmi Note 13 Pro) போன் வெளியாக இருக்கிறது.

ரெட்மி நோட் 13 ப்ரோ அம்சங்கள் (Redmi Note 13 Pro Specifications): இந்த போனில் 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.

வெறும் ரூ.28,999 போதும்.. 200MP கேமரா.. 5100mAh பேட்டரி.. எந்த போன்?

அதோடு டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) சப்போர்ட் கொண்டிருக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்பு வருகிறது. இந்த ரெட்மியில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm Mobile) சிப்செட் வருகிறது.

அதோடு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கொண்டிருக்கிறது. இந்த போனில் 200 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. இந்த போனில் 5100mAh பேட்டரி 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் வருகிறது.

இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ போனில் ஆர்டிக் வைட் (Arctic White), கோரல் பர்பிள் (Coral Purple) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இந்த அம்சங்களை மட்டுமே ரெட்மி இந்தியா நிறுவனம், இதுவரை உறுதி செய்துள்ளது. ஆனால், விலை விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

வெறும் ரூ.28,999 போதும்.. 200MP கேமரா.. 5100mAh பேட்டரி.. எந்த போன்?

இருப்பினும், இந்த போன் ஜனவரி 4ஆம் தேதி வெளியாக இருப்பதால், முன்கூட்டியே விலை விவரங்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. ஆகவே, இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.28,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.30,999ஆகவும் இருக்கிறது.

அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.32,999ஆக இருக்கிறது. இந்த விலையிலேயே அறிமுகம் செய்யப்படும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த போன் ஏற்கனவே சீனாவில் விற்பனைக்கு வந்துவிட்டது. ஆகவே, அந்த போனின் அம்சங்களே இந்த போனிலும் கொடுக்கப்படுகிறது.

ஆகவே, அதை பார்ப்போம். சீன வேரியண்ட்டில் 200 எம்பி மெயின் கேமராவானது, சாம்சங் எச்பி3 (Samsung HP3) சென்சாருடன் வருகிறது. அதேபோல 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா சோனி ஐஎம்எக்ஸ் (Sony IMX355) சென்டாருடனும், 2 எம்பி மேக்ரோ கேமரா ஓம்னிவிஷன் ஓவி02பி10 (Omnivsion OV02B10) சென்சாருடனும் வருகிறது.

இந்த போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் வருகிறது. அதேபோல IP54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 13 Pro With 200MP Camera, 12GB RAM Launch in India on January 4 Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X