Home
Mobile

200MP கேமரா.. 5020mAh பேட்டரி.. மீண்டும் இரண்டு போன்களை களமிறக்கும் Redmi.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி நோட் 12 ப்ரோ சீரிஸ் மாடல்களை கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து ரெட்மி நோட் 13 ப்ரோ சீரிஸ் மாடல்களையும் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் ரெட்மி நோட் 13 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

குறிப்பாக TENAA வலைத்தளத்தில் ரெட்மி நோட் 13 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போன்களின் அம்சங்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போன்கள் 6.67 இன்ச் OLED டிஸ்பிளேவுடன் வெளிவரும். பின்பு சிறந்த பாதுகாப்பு வசதிகளைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

மீண்டும் இரண்டு போன்களை களமிறக்கும் Redmi.. எந்த மாடல்?

அதேபோல் இந்த இரண்டு போன்களும் 200எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளன. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும். அதேபோல் இந்த போன்கள் நான்குவித ஸ்டோரேஜ் மற்றும் ரேம் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ரெட்மி நோட் 13 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 5020எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் அறிமுகமாகும். பின்பு ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 4880 எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும். பின்னு இந்த இரண்டு போன்களும் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. தற்போது இந்த இரண்டு போன்களின் சில விவரங்கள் தான் வெளியாகி உள்ளன. விரைவில் இந்த போன்களின் அனைத்து விவரக்குறிப்புகளும் தெரியவரும். மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்த ரெட்மி கே60 அல்ட்ரா போனின் அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே ( 1.5K OLED display) வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 480 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (480Hz touch sampling rate), எச்டிஆர் 10 பிளஸ் (HDR10+), டால்பி விஷன் (Dolby Vision) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி கே60 அல்ட்ரா போன்.

ஆக்டோ-கோர் டைமன்சிட்டி 9200 பிளஸ் 4என்எம் பிராசஸர் (Octa Core Dimensity 9200+ 4nm processor) வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போன். அதேபோல் MIUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளம் இந்த போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 12ஜிபி/16ஜிபி/24ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி/1டிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, டூயல் ஸ்பீக்கர்கள்,டால்பி அட்மோஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். 50எம்பி சோனி ஐஎம்எஸ்800 சென்சார் (Sony IMX800 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி சோனி ஐஎம்எக்ஸ்596 ( Sony IMX596) கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.

மீண்டும் இரண்டு போன்களை களமிறக்கும் Redmi.. எந்த மாடல்?

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இந்த போனின் எடை 204 கிராம் ஆகும்.

12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி கே60 அல்ட்ரா போனின் ஆரம்ப விலை 2599 யுவான் (yuan) (இந்திய மதிப்பில் ரூ.29,755). குறிப்பாக இந்த போன் விரைவில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 13 Pro Series with 200MP Camera: Specs Leaked Online: check details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X