ஆல் ஏரியாவிலும் கில்லி.. பட்ஜெட்ல 200MP கேமரா.. 120W சார்ஜிங்.. 12GB ரேம்.. 3D டிஸ்பிளே.. எந்த மாடல்?
ரெட்மி பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களுமே மூக்கில்விரல் வைக்கும்படியான பட்ஜெட்டில் 200எம்பி கேமரா, 120W ஹைப்பர்சார்ஜிங், 12ஜிபி ரேம், 3டி கர்வ்ட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களை கொண்ட ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போனின் புதிய எடிஷன் விற்பனையாகிறது.
ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Redmi Note 13 Pro Plus Specifications): இந்த ரெட்மி வேர்ல்டு சாம்பியன் எடிஷனில் 6.67 இன்ச் (2712 x 1220) பிக்சல்கள் 3டி கர்வ்ட் டிஸ்பிளே (3D Curved Display) வருகிறது. இதுவொரு 1.5 ரெசொலூஷன் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவாகும்.

இந்த டிஸ்பிளேவில் 446 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. மேலும், டிசிஐ பி3 கலர் காமட், 68 பில்லியன் கலர் டெப்த், 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.
ஹார்ட் ரேட் டிடெக்சன் (Heart Rate Detection) சப்போர்ட் கொண்ட இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-Display Fingerprint Sensor) வருகிறது. இந்த பீச்சர்கள் மட்டுமல்லாமல், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரொடெக்சன் கொண்டிருக்கிறது.
ஆகவே, அல்ட்ரா பிரீமியம் டிஸ்பிளே அவுட்புட் மட்டுமல்லாமல், பட்டையை கிளப்பும் டியூரபிலிட்டியும் இந்த ரெட்மியில் எதிர்பார்க்கலாம். இந்த டிஸ்பிளேவை போலவே கேமரா பீச்சர்களும் பிரீமியமாக வருகின்றன. இந்த ரெட்மி சாம்பியன் எடிஷனில் 200 எம்பி அல்ட்ரா-ஹை ரெஸ் (Ultra-High Res) மெயின் கேமரா வருகிறது.

சாம்சங் ஐசோசெல் எச்பி3 சென்சார் (Samsung ISOCELL HP3 Sensor) கொண்டிருக்கிறது. இந்த கேமராவில் சூப்பர்கியூபிடி ஆட்டோபோகஸ் (SuperQPD Autofocus), ஓஐஎஸ் (OIS) மற்றும் ஈஐஎஸ் (EIS) சப்போர்ட் வருகிறது. அதேபோல சியோமி ஏஐ என்ஜின் 2.0 (Xiaomi AI Engine 2.0) டெக்னாலஜி வருகிறது.
இதன் மூலம் ஃப்ரேம் செலக்சன், கலர் கன்ட்ரோல் ஏஐ மூலம் செய்து கொள்ளப்படும். மேலும் 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்டிருக்கிறது. போட்டோகிராபி பீச்சர்களை பார்க்கையிஸ், 4X லாஸ்லெஸ் ஜூம், நைட் மோட், டாக்குமென்ட் மோட், போர்ட்ராய்டு மோட், டெப்த் கன்ட்ரோல் போன்றவை உள்ளன.
அதேபோல ஏஐ பியூட்டி, எச்டிஆர், வாய்ஸ் ஷட்டர், ப்ரோ கட், மேஜிக் கட்அவுட் போன்ற பீச்சர்களும் இடம்பெற்றுள்ளன. வீடியோ பீச்சர்களை பொறுத்தவரையில், 4K ரெக்கார்டிங், வீடியோ மேக்ரோ மோட், ஷார்ட் வீடியோ, மூவி ப்ரேம் போன்றவை வருகின்றன. ஆகவே, கேமரா பீச்சர்கள் இந்திய பிரியர்களுக்கு ஏற்றார்போல இருக்கும்.
அதேபோல ஏஐ பியூட்டி மோட் சப்போர்ட் உடன் 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த ரெட்மியில் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 அல்ட்ரா 4என்எம் (MediaTek Dimensity 7200 Ultra 4nm) சிப்செட் வருகிறது. ஆர்ம் ஜி610 எம்சி4 ஜிபியு கிராபிக்ஸ் கொண்டிருக்கிறது. 3 அப்கிரேட்களுடன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மற்றும் MIUI 14 வருகிறது.
120W ஹைப்பர்சார்ஜ் (HyperCharge) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. ஆகவே, ஹை-வோல்டேஜ் கன்ட்ரோலுக்காக சியோமி சர்ஜ் பி1 சிப் (Xiaomi Surge P1 Chip) வருகிறது. இந்த பேட்டரி மூலம் 19 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம். IP68 வாட்டர் ஃப்ரூப் மற்றும் டஸ்ட் ஃப்ரூப் கொண்டிருக்கிறது.
8.9 மிமீ தடிமன் மற்றும் 204.5 கிராம் எடை கொண்டிருக்கிறது. இதுவொரு 5ஜி என்எஸ்ஏ மாடலாகும். 3டி கர்வ்ட் ஃபரன்ட் கிளாஸ் பேக் (3D Curved Front Glass Back) டிசைனில் விக்டரி ப்ளூ (Victory Blue) கலரில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போனின் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.37,999ஆக இருக்கிறது.
இருப்பினும், அறிமுக சலுகையில் ரூ.3000 உடனடி டிஸ்கவுண்ட் உடன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த டிஸ்கவுண்ட் மல்டிபிள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது. ஆகவே, 200 எம்பி கேமரா, 120W சார்ஜிங், 12 ஜிபி ரேம் கொண்ட இந்த ரெட்மி மாடலை வெறும் ரூ.34,999 பட்ஜெட்டில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








