Home
Mobile

ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.33,999 போதும்.. 200MP கேமரா.. 120W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரெட்மி நோட் 13 சீரிஸ் (Redmi Note 13 Series) வரும் ஜனவரி 4ஆம் தேதி வெளியாகும் வேளையில், ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போனின் விலை விவரங்கள் கசிந்து மார்கெட்டையே அதிரவிட்டுள்ளது.

ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Redmi Note 13 Pro Plus Specifications): இந்த ரெட்மி ப்ரோ பிளஸ் போனில் 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 1.5K ரெசொலூஷன் சப்போர்ட் கொண்ட ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவுக்கு, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.33,999 போதும்.. 200MP கேமரா.. 120W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே போன்!

அதோடு 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 3டி கர்வ்ட் டிசைன் கொண்டிருப்பதால், புதுவித டிஸ்பிளே அனுபவத்தை எதிர்பார்க்கலாம்.

இந்த போனில் 120W ஹைப்பர்-சார்ஜ் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. வெறும் 19 நிமிடங்களில் 100 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த போனில் 200 எம்பி மெயின் கேமரா (சாம்சங் எச்பி3 சென்சார்) + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா (சோனி ஐஎம்எக்ஸ்355 சென்சார்) வருகிறது.

அதோடு ஓம்னிவிஷன் ஓவி02பி10 (Omnivsion OV02B10) சென்சார் கொண்ட 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. மேலும், 16 எம்பி செல்பீ கேமரா ஓம்னிவிஷன் ஓவி16ஏ1கியூ (Omnivision OV16A1Q) சென்சாருடன் வருகிறது. கேமிங் பிரியர்களை மிரளவிடும்படியான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7200 Ultra 4nm) சிப்செட் வருகிறது.

ரூ.33,999 போதும்.. 200MP கேமரா.. 120W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே போன்!

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போனில் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வருகிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மர்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் வர இருக்கின்றன.

இந்த அம்சங்களை மட்டுமே, இப்போதைக்கு ரெட்மி இந்தியா நிறுவனம் உறுதி செய்திருக்கிறது. இந்த போன் வரும் ஜனவரி 4ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் வெளியாகும் என்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் விலை மற்றும் கலர் விவரங்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன.

இவ்வளவு அம்சங்களை கொண்டிருந்தும் பட்ஜெட்டில் விலை நிர்ணயம் இருக்கிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.33,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.37,999ஆக இருக்கிறது. இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போனில் ப்யூசன் பிளாக் (Fusion White), ப்யூசன் வைட் (Fusion Purple) மற்றும் ப்யூசன் பர்பிள் (Fusion Black) ஆகிய 3 கலர்கள் இருக்கின்றன. இந்த போனுக்கான எதிர்பார்ப்பு அதிகளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 13 Pro Plus With MediaTek 7200 Ultra Launch on January 4 in India Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X