அதிருது பட்ஜெட்.. வெறும் ரூ.23,100 போதும்.. 200MP கேமரா.. 120W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டே அதிரும்படி பிரம்மாண்ட கேமரா, சிப்செட், பேட்டரி அம்சங்களுடன் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் (Redmi Note 13 Pro Plus) போன் வரும் ஜனவரி 4ஆம் தேதி வெளியாகிறது. இப்போது, டிஸ்பிளே, சிப்செட் விவரங்கள் உறுதியாகியிருக்கிறது.
ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Redmi Note 13 Pro Plus Specifications): இந்த போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7200 Ultra 4nm) சிப்செட் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 (Android 13) மற்றும் மாலி-ஜி610 எம்சி4 ஜிபியு (Mali-G610 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. அதோடு 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் வருகிறது.
மொத்தமாக கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் மாடலில் 2 மெமரி வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. ஆகவே, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.
200 எம்பி மெயின் கேமராவானது, சாம்சங் எச்பி3 (Samsung HP3) சென்சாருடன் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + ஓம்னிவிஷன் ஓவி02பி10 (Omnivsion OV02B10) சென்சாருடன் 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது.

இதுவொரு ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கேமராவாகும். அதேபோல 16 எம்பி செல்பீ கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி16ஏ1கியூ (Omnivision OV16A1Q) சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் இந்திய கேமரா பிரியர்களை கவரும் விதமாகவே இருக்கிறது. இந்த போனில் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் டைப்-சி ஆடியோ சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போனில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப்-சி சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போன் சீனாவில் வெளியாகி விற்பனையில் சக்கைப்போடு போட்டது. இப்போது, இந்தியாவில் வரும் ஜனவரி 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால், ரெட்மி நிறுவனம், அந்த போனின் இந்திய அம்சங்களை ஒவ்வொன்றாக வெளியிட தொடங்கியிருக்கிறது. இப்போது, கலர், டிசைன் மற்றும் சிப்செட் அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

ஆகவே, லெதர் பினிஷிங்கில் மல்டி கலர் கொண்ட ப்யூஷன் டிசைன் (Fusion Design) வேரியண்ட் வெளியாக இருக்கிறது. அதோடு 1.5K ரெசொலூஷன் கொண்ட 3டி கர்வ்ட் டிஸ்பிளே வருகிறது. அதேபோல மீடியாடெக் டைமன்சிட்டி 7200 அல்ட்ரா 4என்எம் கொண்டுள்ளது. மற்ற அம்சங்களும் சீன வேரியண்ட்டை போலவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இப்போது, சீனாவில் இந்த போனுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட விலையை பார்ப்போம். இந்த போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.23,100க்கு விற்பனையாகிறது. அதேபோல 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.25,015க்கும், 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.26,150க்கும் விற்பனையாகிறது. ஆகவே, இந்தியாவில் ரூ.24,000 பட்ஜெட்டில் வெளியாகும் என்பது உறுதியாகிவிட்டது.


Click it and Unblock the Notifications








