இனி Redmi ராஜாங்கம் தான்.. 200MP கேமரா.. 120W சார்ஜிங்.. கர்வ்டு டிஸ்பிளே உடன் புது போன்.. என்ன மாடல்?
ரெட்மி நிறுவனம் சமீபத்தில் தான் ரூ.10,999-க்கு ரெட்மி 12 5ஜி எனும் போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு அசத்தலான 5ஜி போனை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது ரெட்மி நோட் 13 பிளஸ் எனும் ஸ்மார்ட்போனை தான் இந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
குறிப்பாக ரெட்மி நோட் 12 சீரிஸ் போலவே இந்த ரெட்மி நோட் 13 சீரிஸ் வெளிவரும். அதாவது ரெட்மி நோட் 13, ரெட்மி நோட் 13 ப்ரோ, ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஆகிய போன்கள் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போன்கள் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் (Redmi Note 13+) அம்சங்களை இப்போது பார்ப்போம்.

அதாவது 200எம்பி சாம்சங் எச்பி3 ( Samsung HP3) பிரைமரி கேமரா+ 8எம்பி சோனி ஐஎம்எஸ்355 சென்சார் (Sony IMX355 sensor) அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன்.
மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன். குறிப்பாக டிஎஸ்எல்ஆர் கேமராக்களை விட இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
1.5கே கர்வ்டு-எட்ஜ் ( curved-edge) டிஸ்பிளே கொண்டு இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே ஒரு தனி அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம்.
விரைவில் அறிமுகமாகும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 9200 பிளஸ் (Mediatek Dimensity 9200+) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு இந்த புதிய ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போன் அறிமுகமாகும்.
ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போனில் 8ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன். மேலும இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. எனவே இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போன்.
குறிப்பாக 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த போன் பட்ஜெட் விலையில் இந்தியாவுக்கு வரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








